மார்த்தாண்டத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு!!

Read Time:2 Minute, 3 Second

a17fd06b-6434-4dc0-8b96-5d956f87841f_S_secvpfகுழித்துறை அருகே அமரிவிளை வீடு பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியம். இவரது மனைவி சுதா (வயது 24). இவர் நேற்று மாலை பொன்விளையில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு சென்றார். கழுவன்திட்டை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சுதாவின் பின்னால் வந்து கொண்டிருந்த வாலிபர் ஒருவர் சுதாவின் கழுத்தில் கிடந்த 7 பவுன் செயினை பறித்தார்.

சுதா செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டார். உடனே அந்த வாலிபர் சுதாவை சரமாரியாக தாக்கினார். இதில் நிலை தடுமாறி சுதா கீழே விழுந்தார். அப்போது அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் செயினை பறித்தார். அங்கு மற்றொரு வாலிபர் தயார் நிலையில் வைத்திருந்த மோட்டார் சைக்கிளில் இருவரும் தப்பியோடி விட்டனர். திருட்டு போன நகையின் மதிப்பு ரூ.1¼ லட்சமாகும்.

இது குறித்து சுதா மார்த்தாண்டம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சப்–இன்ஸ்பெக்டர் ஸ்ரீஜா ராணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

அந்த பகுதியில் வாகன சோதனையிலும் ஈடுபட்டனர். சந்தேகப்படும்படியாக வந்த நபர்களை பிடித்து விசாரித்தனர். ஆனால் யாரும் சிக்கவில்லை. இது குறித்து சுதா கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செல்போனில் மிரட்டல்: திருச்செங்கோட்டில் பள்ளி மாணவி தற்கொலை!!
Next post சுயாதீன ஆணைக்குழு குறித்து கலந்துரையாடல்!!