விருத்தாசலம் அருகே கடன் தொல்லையால் 4 பேர் விஷம் குடித்தனர்!!

Read Time:1 Minute, 50 Second

0ce7af82-4adc-43f4-943c-036598d69f2a_S_secvpfகடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள வி.சாத்தமங்கலத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 49), விவசாயி. இவரது மனைவி வள்ளி (40). இவர்களுடைய மகன் வீரமுத்து (15). 10–ம் வகுப்பு மாணவன். மகள், முத்துலட்சுமி (14), 9–ம் வகுப்பு மாணவி.

சேகருக்கு விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டது. எனவே கடன் வாங்கி குடும்பம் நடத்தினார். வாங்கிய கடனை குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்த முடியவில்லை. நாளடைவில் கடன் தொல்லை அதிகரித்தது.

இதனால் விரக்தியடைந்த சேகர், குடும்பத்தினருடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று இரவு குளிர் பானத்தில் விஷத்தை கலந்து குடித்தார். அதேபோல் தனது மனைவி, மகன், மகள் ஆகியோருக்கும் கொடுத்து குடிக்க செய்தார்.

சிறிது நேரத்தில் விஷம் தனது சுயரூபத்தை வெளிப்படுத்தியது. இதனால் விஷம் குடித்த 4 பேரும் துடிதுடித்து அலறினர். அந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.

உயிருக்கு போராடிய சேகர், வள்ளி, வீரமுத்து, முத்து லட்சுமி ஆகியோரை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்கள் 4 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்த ஊ.மங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பேச்சிப்பாறையில் நர்சிங் மாணவியுடன் வாலிபர் உல்லாசம்: திருமணத்துக்கு மறுத்ததால் போலீசில் புகார்!!
Next post செல்போனில் மிரட்டல்: திருச்செங்கோட்டில் பள்ளி மாணவி தற்கொலை!!