பேச்சிப்பாறையில் நர்சிங் மாணவியுடன் வாலிபர் உல்லாசம்: திருமணத்துக்கு மறுத்ததால் போலீசில் புகார்!!

Read Time:3 Minute, 19 Second

854b4fc9-f1e2-4943-9d35-f99b42f4e628_S_secvpfபேச்சிப்பாறை வேம்பன் மூட்டுவிளையைச் சேர்ந்தவர் சிவபிரசாத் (வயது 35). திருமணம் ஆகவில்லை.

இவருக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த 18 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண் குலசேகரத்தில் உள்ள நர்சிங் கல்லூரியில் லேப்–டெக்னீசியன் படித்து வருகிறார். மாலை நேரங்களில் அந்த பகுதியைச் சேர்ந்த மாணவ – மாணவிகளுக்கு டியூசனும் எடுத்து வந்தார். அவரது தாயார் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் தனது பாட்டி வீட்டில் அவர் வசித்து வந்தார்.

நர்சிங் மாணவியுடன் நெருங்கி பழகிய சிவபிரசாத் திருமண ஆசை காட்டி அவருடன் உல்லாசம் அனுபவித்தார். கடந்த 20–ந்தேதி இரவு மாணவியுடன் உல்லாசம் அனுபவிப்பதற்காக அவரை வீட்டில் இருந்து வெளியே வரவழைத்தார். அப்போது சிவபிரசாத்தின் பெற்றோரும், மாணவியின் பாட்டியும் அவர்களை பார்த்து விட்டனர்.

உடனே மாணவியின் பாட்டி 2 பேரையும் கண்டித்தார். மேலும் தனது பேத்தியை சிவபிரசாத் திருமணம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். ஆனால் சிவபிரசாத் திருமணம் செய்ய மறுத்ததுடன் மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இதுகுறித்து அந்த மாணவி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரில் சிவபிரசாத் திருமண ஆசை காட்டி என்னுடன் உல்லாசமாக இருந்தார். சம்பவத்தன்று நான் குழந்தைகளுக்கு டியூசன் எடுத்துக்கொண்டு இருந்தேன். அப்போது என் மீது ஒரு கல்லை வீசி என்னை வெளியே வரச் சொன்னார். ஆனால் நான் வெளியே வர மறுத்தேன்.

பின்னர் எனது செல்போனில் பேசி இன்று நீ வராவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டினார். இதனால் நான் பயந்து போய் இரவு அவரை சந்திக்கச் சென்றேன். அப்போது அவரது பெற்றோர் எங்களை கையும், களவுமாக பிடித்துக்கொண்டனர்.

அப்போது எனது பாட்டி என்னை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி சிவபிரசாத்திடம் கூறினார். ஆனால் அவர் என்னை திருமணம் செய்ய மறுத்து, கொலை மிரட்டல் விடுத்து சென்றார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.

புகார் குறித்து இன்ஸ்பெக்டர் ஜானகி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குமாரபாளையம் அருகே பேரன்–பேத்திக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற பாட்டி!!
Next post விருத்தாசலம் அருகே கடன் தொல்லையால் 4 பேர் விஷம் குடித்தனர்!!