ஓமலூர் பஸ் நிலையம் அருகே போதையில் கிடந்த அரசு பேருந்து கண்டக்டர்!!

Read Time:2 Minute, 6 Second

6163b92f-439d-4a35-9c1c-1ba019f32a11_S_secvpfசேலம் மாவட்டம் ஓமலூர் பேருந்து நிலையம் அருகே மேட்டூர் பஸ் நிறுத்தத்தில் அரசு பேருந்து நடத்துனர் ஒருவர் போதையில் உருண்டு புரண்டு கொண்டிருந்தார். அவர் அப்படி கிடப்பதை பார்த்த பொதுமக்கள் முகம் சுழித்து கொண்டு சென்றனர்.

இதில் அவரை அடையாளம் தெரிந்த சிலர் சேலம் – மைசூர் செல்லும் அரசு பேருந்து கண்டக்டர் என்றும், பேருந்தை விட்டு இறங்கியதும் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு ரோட்டோரத்தில் விழுந்து கிடப்பதாகவும் கூறினர். இவர் யார் என்று விசாரித்த போது சேலம் ஜான்சன் பேட்டை அரசு டெப்போவில் இவர் கண்டக்டராக பணியாற்றுவது தெரிய வந்தது. அதாவது இவர் சேலத்தில் இருந்து மைசூர் செல்லும் பேருந்தில் கண்டக்டராக வேலை பார்ப்பவர் என்றும் தெரிய வந்தது.

இவரது சொந்த ஊர் மேச்சேரி ஆகும். இவரைபற்றி ஓமலூர் போக்குவரத்து கழகத்தில் உள்ள பணியாளர்களிடம் கேட்ட போது சேலம் டெப்போவில் வேலை செய்வதால் இவர் பெயர் தெரியவில்லை என்றும், சேலம் ஜான்சன் பேட்டை பஸ் டெப்போவில் விசாரிக்கும் படி கூறி டெப்போ போன் நெம்பரை கொடுத்தனர். சேலம் ஜான்சன் பேட்டை டெப்போவிற்கு போன் செய்த போது போன் அடித்து கொண்டே இருந்தது யாரும் போனை எடுக்கவில்லை.

அரசு போக்குவரத்து கழக பேருந்தில் பணியாற்றும் கண்டக்டர் போதையில் விழுந்து கிடந்த சம்பவம் ஓமலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தினமும் காலையில் காபிக்கு பதிலாக வெள்ளை பூசணி ஜூஸ் குடிப்பதால் பெறும் நன்மைகள்..!!
Next post பொட்டு சுரேஷ் கொலையில் முழு பின்னணியை சொல்ல மறுப்பு: அட்டாக் பாண்டியிடம் தீவிர விசாரணை!!