இந்து கடவுளை அவமதிக்கும் எழுத்தாளர்களின் நாக்கை அறுப்போம் – ஸ்ரீ ராம் சேனா!!

Read Time:1 Minute, 52 Second

da1428ff-2fac-4baf-8e1c-72c24e0a1ad8_S_secvpfஇந்து கடவுளை அவமதிக்கும் எழுத்தாளர்களின் நாக்கை அறுப்போம் என்று சர்ச்சைக்குரிய ஸ்ரீ ராம் சேனா அமைப்பை சேர்ந்த இந்துத்துவ தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

தேசிய வார இதழ் ஒன்றில் இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலின்படி, கர்நாடக மாநில ஸ்ரீ ராம சேனா இந்து அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சித்தலிங்க சுவாமி இந்து கடவுள்களை அவமதிப்பதை தொடரும் எழுத்தாளர்களின் நாக்கை அறுப்போம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு கர்நாடகாவில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த இவர், “ராமாயணம் மகாபாரதம் போன்ற காவியங்கள் கோடிக்கணக்கான மக்களால் புனிதமானதாக கருதப்படுகிறது. கே.எஸ் பக்வான், சந்திர சேகர பாட்டில் போன்ற எழுத்தாளர்கள் இந்து கடவுள்களை அவமதிப்பது இவர்களின் மனதை புண்படுத்துகிறது. தாங்கள் வழிபடும் ராமனை ஒருவர் விமர்சிப்பதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இப்படி விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ளா விட்டால் எழுத்தாளர்களின் நாக்கை அவர்கள் அறுப்பார்கள்.” என்று கூறியுள்ளார்.

அண்மையில் கன்னட எழுத்தாளர் கல்புர்கி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் இந்த அமைப்பைச் சேர்ந்த பிரசாத் அட்டவரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒடிசாவில் பரபரப்பு: குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கழுத்தை அறுத்து மர்ம கொலை!!
Next post தினமும் காலையில் காபிக்கு பதிலாக வெள்ளை பூசணி ஜூஸ் குடிப்பதால் பெறும் நன்மைகள்..!!