சந்திரகிரி பகுதியில் காரில் கடத்திய ரூ.30 லட்சம் செம்மரம் பறிமுதல்: 2 பேர் கைது!!

Read Time:1 Minute, 53 Second

2bf0cf53-38a1-4e92-9bc8-34e8e76f47c1_S_secvpfசந்திரகிரி அருகே சிறப்பு அதிரடிப்படை போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் சொகுசுகாருடன் 22 செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆந்திர மாநிலத்தில் செம்மரகட்டைகள் கடத்தலை தடுக்க வனத்துறையினருடன் சிறப்பு அதிரடிப்படை போலீசாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும் செம்மர கட்டைகள் தொடர்ந்து கடத்துவது நடந்து கொண்டுதான் உள்ளது.

இந்த நிலையில் சந்திரகிரி மண்டலம் சீனிவாசமங்காபுரத்திலிருந்து நரசிங்கபுரம் செல்லும் வழியில் ரெயில்வே பாலத்தையொட்டி சொகுசு கார் ஒன்றில் செம்மர கட்டைகளை சிலர் ஏற்றிக்கொண்டிருப்பதாக சிறப்பு அதிரடிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சிறப்பு அதிரடிப்படை போலீஸ் அதிகாரி விஜயகுமார் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்களை பார்த்ததும் 30–க்கும் மேற்பட்ட கடத்தல்காரர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர்.

அவர்களில் 2 பேரை சிறப்பு அதிரடிப்படை போலீசார் மடக்கிப்பிடித்தனர். பின்னர் 22 செம்மரக்கட்டைகளை ஏற்றிய நிலையில் சொகுசுகாரையும் அவர்கள் கைப்பற்றினர். இந்த நிலையில் பிடிபட்ட 2 பேரை கைது செய்த போலீசார் தப்பி ஓடிய மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐ.நா அறிக்கையை நிராகரிக்குமாறு மஹிந்த விடுத்த கோரிக்கை தொடர்பில் ராஜித்த!!
Next post ஒடிசாவில் பரபரப்பு: குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கழுத்தை அறுத்து மர்ம கொலை!!