இம் மாத உதவித் தொகை தாமதம் – அல்லலுறும் அகதிகள்!!

Read Time:1 Minute, 42 Second

1815888901Untitled-1இலங்கை தமிழர் அகதிகள் முகாமில், ஒவ்வொரு மாதமும், 5ம் திகதி வழங்கப்படும் உதவித்தொகை, இம்மாதம் இதுவரை வழங்கப்படவில்லை என, அகதிகள் தெரிவிக்கின்றனர்.

கும்மிடிப்பூண்டி, இலங்கை தமிழர் அகதிகள் முகாமில், 935 குடும்பங்களைச் சேர்ந்த, 3,085 பேர் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு குடும்ப தலைவருக்கு 1,000 ரூபாய், 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, 750 ரூபாய், 12 வயதுக்குட்பட்டவர்களுக்கு, 400 ரூபாய் என, தமிழக அரசு மூலம், மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும், 5ம் திகதி வழங்கப்படும் இந்த உதவித்தொகை, இம்மாதம் இதுவரை வழங்கப்படவில்லை என, அகதிகள் தெரிவிக்கின்றனர், தமிழக ஊடகமான தினமலர் குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தினர் கூறுகையில், ´அகதிகளுக்கு ´ஸ்மார்ட் கார்டு´ வழங்கப்பட்டுள்ளது. இம்மாதத்தில் இருந்து, அந்த ஸ்மார்ட் கார்டு மூலம் உதவித்தொகை வழங்கப்பட உள்ளன.

முதல் மாதம் என்பதால், தவிர்க்க முடியாத கால தாமதம் ஏற்பட்டது. இரு தினங்களுக்குள் உதவித்தொகை வழங்கப்படும். அடுத்த மாதத்தில் இருந்து எப்போதும் போல் வழங்கப்படும்´ என, தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கைதாகி நான்கு மாதங்களின் பின் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் பா.உ!!
Next post யாழ் நீதிமன்ற தாக்குதல் – 20 பேருக்கு தொடர்ந்து விளக்கமறியல்!!