கைதாகி நான்கு மாதங்களின் பின் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் பா.உ!!

Read Time:1 Minute, 54 Second

1411680432Untitled-1முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜீன்வாஸ் குணவர்த்தன கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த அரசாங்கத்தில் ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான வாகனங்களை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இவர் கடந்த மே மாதம் 11ம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து நீதிமன்றத்தில் பல முறை ஆஜர்படுத்தப்பட்ட இவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

இதேவேளை, நேற்றும் கூட கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகேவினால் சந்தேகநபரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 06ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் இன்று 10 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 200 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் இவரை விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்பட்டால் பிணை இரத்துச் செய்யப்படும் எனவும் இதன்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக் கிழமை இரகசியப் பொலிஸில் ஆஜராக வேண்டும் எனவும் சஜீன் வாஸூக்கு இதன்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை – காரணம்…?
Next post இம் மாத உதவித் தொகை தாமதம் – அல்லலுறும் அகதிகள்!!