சேயா செதவ்மி சிறுமியை கொன்ற, மனித மிருகங்களை தேடி வேட்டை..!! –பஸீர்!!

Read Time:25 Minute, 44 Second

timthumb (11)சேயா செதவ்மி. ஐந்தே வய­தான முன்­பள்ளி சிறுமி. கம்­பஹா மாவட்­டத்தின் திவு­ல­பிட்­டிய தேர்தல் தொகு­தியின் கொட்­ட­தெ­னி­யாவ பொலிஸ் பிரிவின் படல்­க­ம-­அக்­க­ரங்­கஹ பகு­தியை சேர்ந்­தவர்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை (11ஆம் திகதி) பின்­னி­ர­வுக்கும் சனிக்­கி­ழமை அதி­கா­லைக்கும் இடையில் சேயா­வுக்கு நேர்ந்த கொடூ­ரத்தை எழுத்­துக்­களால் முழு­மை­யாக எழு­தி­விட முடி­யாது.

ஆம், உறங்கிக் கொண்­டி­ருந்த போது மாய­மான சேயா சனிக்­கி­ழமை (12 ஆம் திகதி) காலை முதல் 24 மணி­நேர தேடு­தலின் பின்னர் ஞாயிறு காலை சட­ல­மாக கிடைக்கும் போது ஏமாற்றம், கவலை, ஆத்­திரம், கோபம், இய­லாமை, கொடூரம் என அத்­தனை விட­யங்­க­ளையும் அது ஏற்­ப­டுத்­தி­யது.

சிரித்து ஓடிக்­கொண்­டி­ருந்த ஓடைக்­க­ருகே, யாரும் எதிர்­பார்த்­தி­ராத நிலையில் சேயா நிர்­வா­ண­மாக, அவ­ளது கீழா­டையின் ஒரு பகு­தி­யான வெள்ளை துணி­யினால் கழுத்து நெரித்து கட்­டப்­பட்­டி­ருந்த நிலையில் சட­ல­மாக மீட்­கப்­படும் போதுதான் கொடூ­ரத்தின் உச்சக் கட்­டத்தை உணர முடிந்­தது.

கடந்த 11 ஆம் திகதி வெள்­ளி­யன்று இரவு சேயா எல்லா சிறு­மி­களையும் போலவே, தனது அம்­மா­வுடன் சேர்ந்து சின்­னத்­திரை நாட­கங்­களை ரசித்­த­வாறு கதி­ரை­யி­லேயே தூங்­கி­விட்டாள். தூங்­கி­யவள் மீண்டும் எழும்­பவே இல்லை.

சேயா­வுக்கு ஒரு தங்கை ஒரு அண்ணன். அண்­ண­னுக்கு 7 வயது. தங்­கைக்கு 2 ½ வயது, 37 வய­தான பெற்றோர், பாட்டன், பாட்டி இதுதான் சேயாவின் உலகம்.

கடந்த வெள்­ளி­யன்று (11 ஆம் திகதி) சேயாவின் பாட்­டனும் பாட்­டியும் மரண வீடொன்­றுக்கு வீட்டில் இருந்து செல்­லவே, தந்­தையும் வேலைக்கு சென்று விட்டார். இந்­நி­லையில் வீட்டில் சேயாவும், அவள் தாய், அண்ணன், தங்கை ஆகிய நால்­வரே இருந்­துள்­ளனர்.

தந்தை ஆடைத் தொழிற்­சா­லை­யொன்றின் ஊழி­யர்­க­ளுக்கு போக்­கு­வ­ரத்து சேவை­யினை நடத்­தி­வந்த நிலையில் வழ­மை­யாக வீட்­டுக்கு வர தாம­த­மா­வ­துண்டு. அன்றும் அப்­ப­டித்தான். தந்தை வீட்­டுக்கு வரும்­போது நேரமோ நள்­ளி­ரவு 12.00 மணியைத் தாண்டியிருந்தது.

வெள்ளி மாலை மரண வீட்­டுக்குச் சென்ற பாட்­டனும் பாட்­டியும் இரவு 10.00 மணியும் கடந்த நிலை­யி­லேயே வீட்­டுக்கு வந்­துள்­ளனர்.

பார்ப்­ப­தற்கு சாதாரணமாக தெரியும். சேயாவின் வீட்டில் ஒரு அறையில் சேயாவும் அவள் பெற்­றோரும் சகோ­தர சகோ­த­ரியும் தங்­கி­யி­ருக்க பிறி­தொரு அறையில் பாட்­டனும் பாட்­டியும் தங்­கி­யி­ருந்­தனர். சேயாவின் அறையில் விசா­ல­மான கட்டில் போடப்­பட்­டி­ருந்த நிலையில் அக் கட்­டி­லா­னது அறையின் ஜன்­ன­லோடு சேர்ந்­த­தாக இருந்­தது.

நான்கு ஜன்­னல்கள் அந்த அறைக்கு இருந்த நிலையில், அதில் மூன்றுக்கு இரும்புக் கம்­பி­யினால் சட்­டகம் (கிரில்) அமைக்­கப்­பட்­டி­ருந்­தது. ஒன்­றுக்கு அவ்­வா­றான பாது­காப்பு சட்­டகம் இருக்­க­வில்லை.

தொலைக்­காட்சிக்கு முன்னாலேயே உறங்­கி­விட்ட சேயாவை வெள்ளி இரவு 9.00 மணிக்­கெல்லாம் கட்­டிலில் கொண்டு போய் கிடத்தி நுளம்பு வலையையும் போட்­டு­விட்ட தாய், தனது 2½ வயது குழந்­தை­யுடன் இன்னும் சிறிது நேரம் சின்­னத்­திரை பார்த்­துள்ளார்.

இதன்­போது சேயாவின் அண்­ணனும் உறக்­கத்­தி­லேயே இருந்­துள்ளான். சிறிது நேரத்தில் சேயாவின் தாயும், குழந்­தை­யுடன் உறக்­கத்­துக்கு சென்­றுள்ளார். அப்­போது சேயா கட்­டிலில் ஆழ்ந்த உறக்­கத்தில் இருந்­துள்ளார்.

தனது கணவன் மற்றும் சேயாவின் பாட்டன் பாட்டி ஆகியோர் வீட்­டுக்கு வெளியே சென்­றி­ருந்­ததால் அவர்­களின் வரு­கைக்­காக வீட்டின் பிர­தான கதவு தாழி­டப்­ப­டாது திறந்து வைக்­கப்­பட்­டி­ருந்­துள்­ளது.

மறு­புறம் சேயா உறங்கிக் கொண்­டி­ருந்த கட்­டி­லுக்கு நேராக இருந்த பாது­காப்பு சட்­ட­க­மற்ற ஜன்னல் கூட சரி­யாக மூடப்­ப­டாதே இருந்­துள்­ளது.

இரவு 10.30 மணிக்­கெல்லாம் பாட்­டனும் பாட்­டியும் வீடு திரும்பி தமதுஅறையில் உறக்கத்துக்கு சென்று விடவே நள்­ளி­ரவு 12.00 மணியை தாண்டி வீட்­டுக்கு வந்த சேயாவின் தந்தை தாயிடம் சேயா எங்கே என வின­வி­யுள்ளார்.

இரவு நேரத்தில் திடீ­ரென விழிக்கும் சந்­தர்ப்­பங்­களில் சேயா பாட்டன் பாட்­டி­யிடம் சென்று உறங்கும் பழக்கம் கொண்­டவள் என்ற ரீதியில் அவர்­க­ளது அறையில் உறங்­கு­வதாக அரைத் தூக்­கத்தில் தாய் பதி­ல­ளித்­துள்ளார்.

சனி காலை விடிந்­தது. வேலைக்கு புறப்­பட தயா­ரான சேயாவின் பாட்டன் வழமை போன்றே, சேயா எங்கே என தாயிடம் கேட்­டுள்ளார். அவள் பாட்­டி­யுடன் உறங்­குவ­தாக தாய் கூறவே தனது அறைக்கு சென்ற பாட்டன் சேயா எங்கே என வினவ அவள் தாயுடன் உறங்­கு­வ­தாக பாட்டி குறிப்­பிட்­டுள்ளார்.

பாட்டன் சேயாவை பார்த்­து­விட்டே வேலைக்கு செல்லும் வழக்­கத்தைக் கொண்­டி­ருந்த நிலையில், மீண்டும் சேயாவின் அறைக்கு சென்று பார்த்­த­போது அங்கும் அவளைக் காணா­ததால் பாட்டன் வீட்டில் சப்­த­மிட்டு சேயாவை காண­வில்­லை­யென தேடித் தீர்த்­துள்ளார். பாட்­டனின் சப்­தத்­துடன் அந்த வீடே சேயாவை தேடி­யது.

ஈற்றில் சனி காலை 7.30 மணி­ய­ளவில் கொட்­ட­தெ­னி­யாவ பொலிஸ் நிலை­யத்­துக்கு சென்ற சேயாவின் பாட்­டனும் தந்­தையும் சேயாவை காண­வில்­லை­யென முறைப்­பா­ட­ளித்­தனர்.

உட­ன­டி­யாக செயற்­பட்ட கொட்­ட­தெ­னி­யாவை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி உதித்த குமார தலை­மை­யி­லான பொலிஸ்­குழு, சேயாவின் வீட்டை நோக்கி விரைந்­த­துடன் விசா­ர­ணை­களை உடன் ஆரம்­பித்­தது.

இத­னி­டையே சேயா காணாமல் போன செய்தி ஊர் முழு­வதும் பர­வவே, ஊராரும் சேர்ந்து தேடு­தலை ஆரம்­பித்­தனர். இந்­நி­லையில் பொலிஸ் பரி­சோ­தகர் உதித் குமார தனது உயர் அதி­கா­ரி­க­ளுக்கு விட­யத்தை அறி­விக்­கவே, விசா­ர­ணைகள் மேலும் துரி­த­மா­னது.

மேல்­மா­கா­ணத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜய­சுந்­தர, மேல் மாகாணம்- வடக்கு பிராந்­தி­யத்­துக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் எல்.ஜி.குல­ரத்ன ஆகி­யோரின் நேரடி மேற்­பார்­வையில் நீர்­கொ­ழும்பு பொலிஸ் நிலை­யத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் அனுர அபே­விக்­­ர­மவின் வழி­காட்­டலில் நீர்­கொ­ழும்பு பிரிவு 2 க்கு பொறுப்­பான உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஜயந்த அத்­து­கோ­ர­ளவின் கீழ் விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்­டன.

சிறு­மியைத் தேட உட­ன­டி­யாக கொட்­ட­தெ­னி­யாவ பொலிஸ் நிலைய உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு மேல­தி­க­மாக திவு­ல­பிட்­டிய, ராகம பொலிஸ் நிலை­யங்­களில் இருந்தும் பொலிஸார் வர­வ­ழைக்­கப்­பட்­டனர்.

நீர் கொழும்பு பொலிஸ் தட­யவியல் பிரி­வினர் ஸ்தலத்­துக்கு அழைக்­கப்­பட்­ட­துடன் பொலிஸ் மோப்­ப­நா­யான ‘வீக்கி’ யும் வர­வ­ழைக்­கப்­பட்டு சேயாவை தேடும் பணி விரி­வு­ப­டுத்­தப்­பட்­டது.

இந்­நி­லையில் சேயா இறு­தி­யாக அணிந்­தி­ருந்த சிவப்பு நிற மேலாடை கழற்றி கட்­டி லில் அப்­ப­டியே இருந்த நிலையில் அந்த அறையின் உள், மற்றும் வெளிப்­பக்­கங்­களை குற்­றப்­பி­ர­தே­ச­மாக வரை­ய­றுத்து பொலிஸ் தட­ய­வியல் பிரி­வினர் தட­யங்­களை சேக­ரித்­தனர்.

அதன்­படி பாது­காப்பு சட்­ட­க­மற்ற ஜன்னல் பகு­தியில் இருந்து சந்­தே­கத்­துக்கு இட­மான கைவிரல் ரேகை­களை அவ­தா­னித்த பொலிஸார், சேயா உறக்­கத்­துக்கு சென்ற கட்­டிலில் அடை­யாளம் தெரி­யாத நபர் ஒரு­வரின் சேற்று கால் தடமும் மேலும் 6 தட­யங்­களும் இருப்­பதை கண்­ட­றிந்­தனர்.

இந்­நி­லையில் சனி­யன்று முழு­வதும் சேயாவை தேடியும் அவள் கிடைக்­க­வில்லை. இந்­நி­லையில் மறுநாள் ஞாயி­றன்றும் தேடுதல் தொடர்ந்­தது. கொட்­ட­தெ­னி­யாவை பிர­தே­ச­மெங்கும் பொலி­ஸாரும் பொது­மக்­களும் சல்­லடை போட்டு தேடினர்.

பொலி­ஸா­ருடன் இணைந்து அந்த ஊரைச் சேர்ந்­தவர்கள் ஞாயிறு காலையில், கெஹல் எல்ல கனத்தை பகு­தியை நோக்கி தேடு­தலை விஸ்­த­ரித்­தனர்.

எனினும் அதில் பல­னில்லை. இந்­நி­லையில் தான் அப்­பி­ர­தே­சத்தில் உள்ள தென்னந் தோப்பு ஒன்­றுக்குள் இந்த குழு தேடு­தலை நடத்தச் சென்­றது. அந்த தோப்பின் காவ­லாளி வாயிலை திறந்து கொடுக்­கவே, ஒவ்­வொரு அடி­யாக தேடிய அந்தக் குழு அந்த தோட்­டத்தின் எல்­லை­வரை சென்­றது.

அப்­போது நேரமோ காலை 9.00 மணியை கடந்­தி­ருந்­தது. தோப்பின் எல்­லையில் இருந்த அரச மரத்தின் அருகே, பற்­றைக்குள் ஏதோ ஒன்றைக் கண்ட பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒருவர் ‘அதோ…­அது அந்த சிறு­மி­தானே…’ என குரல் எழுப்­பவே எதிர்­பார்ப்­புக்கள், காத்­தி­ருப்­புக்கள் அனைத்தும் சுக்கு நூறா­கின.

எதைப்­பார்ப்­பது…. ஓடிக் கொண்­டி­ருந்த ஓடையின் அருகே பற்­றைக்குள் கழுத்தில் வெள்ளைத் துணி ஒன்றால் கட்­டப்­பட்­டி­ருந்த நிலையில் நிர்­வா­ண­மாக, கைவி­ரல்கள் குவிந்த நிலையில், கால்கள் மடிந்த நிலையில் சேயா உயி­ரற்ற சட­ல­மாக இருந்தாள்.

ஊரே ஒன்று திரண்­டது. சேயாவின் நிலையை எண்ணி கண்ணீர் விட்டு கத­றி­ய­ழு­தது. சேயாவை அஸ்­த­மிக்கச் செய்த மனி­த­மி­ருகம் யார் என்ற கேள்­வி­யுடன் தமது இய­லா­மையை நொந்­து­கொண்­டனர்.

தாய் சமந்தி ரேணுகா, தந்தை உபுல் நிஸாந்த ஆகி­யோரும் சேயாவின் பாட்டன், பாட்டி உள்­ளிட்­ட­வர்­களும் கத­றி­ய­ழு­தனர். என்ன பயன். கொடூர அரக்­கர்­களின் உல­கத்­துக்கு சேயா விடை கொடுத்து வெகு நேர­மா­கி­யி­ருந்­தது.

அன்று மாலை ஸ்தலம் விரைந்த மினு­வாங்­கொடை மேல­திக நீதிவான் சிசிர விஜே­சூ­ரிய நீதிவான் விசா­ர­ணை­களின் பின்னர், சட்ட வைத்­திய நட­வ­டிக்­கை­க­ளுக்­காக நீர்­கொ­ழும்பு வைத்­தி­ய­சா­லைக்கு சட­லத்தை அனுப்­பினார்.

கடந்த திங்­க­ளன்று நீர்­கொ­ழும்பு வைத்­தி­ய­சா­லையில் சுமார் இரு மணி நேரம் இடம்­பெற்ற பிரேத பரி­சோ­தனை மற்றும் ஆய்­வு­களின் பின்னர், சட்ட வைத்­திய அதி­காரி ரூஹுல் ஹக் தீர்ப்பை வெளி­யிட்டார்.

சேயா மிகக் கொடூ­ர­மாக பாலியல் பலாத்­கா­ரத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு, கழுத்து நெரித்து படு­கொலை செய்­யப்­பட்­டுள்ளாள் என தீர்ப்­ப­ளித்த சட்ட வைத்­திய அதி­காரி சேயாவின் உடற்­பா­கங்­களை மேல­திக ஆய்­வுக்கு அனுப்­பி­ய­துடன் சட­லத்தை குடும்­பத்­தா­ரிடம் ஒப்­ப­டைத்தார்.

கடந்த 16ஆம் திகதி புத­னன்று சேயா தனது 6 ஆவது பிறந்த தினத்தைக் கொண்­டாட இருந்த நிலையில் 15 ஆம் திகதி மண்­ணுக்குள் புதைக்­கப்­பட்டாள்.

இந்­நி­லையில் மூன்று பொலிஸ் குழுக்கள் விசா­ர­ணை­களை மேற்­கொண்ட நிலையில் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­ககோன் விசா­ர­ணை­களை தனது நேரடி கட்­டுப்­பாட்டில் கொண்­டு­வந்து, சேயாவை கொன்ற மனித மிரு­கத்தை கண்­டு­பி­டிக்கும் பொறுப்பை குற்றப் புல­னாய்வுப் பிரி­விடம் ஒப்­ப­டைத்தார்.

குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்­ன, சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் சுகத் நாகஹமுல்ல ஆகி­யோரின் கீழ் 3 பொலிஸ் குழுக்கள் கொட்­ட­தெ­னி­யா­வவிற்கு அனுப்­பப்­பட்­டன.

மொத்­த­மாக 6 பொலிஸ் குழுக்கள் தற்­போது விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­து­வரும் நிலையில் மனித மிரு­கத்தை அடை­யாளம் காணும் இறுதி கட்­டத்தை நோக்கி வி­சா­ர­ணைகள் நகர்ந்­துள்­ளன.

குறிப்­பாக சேயாவின் படு­கொ­லை­யுடன் ஆரம்­பத்தில் அவ­ரது தந்தை, தாய் ஆகி­யோரும் சந்­தே­கிக்­கப்­பட்ட நிலையில், பாதிக்­கப்­பட்ட தரப்பு என்ற ரீதியில் விசா­ர­ணைக்கு அது பாரிய சவாலை ஏற்­ப­டுத்­தி­யது.

அந்த சந்­தேகம் பாது­காப்பு கார­ணங்­களை உரு­வாக்கி தனது சொந்த மகளின் கல்­லறை வரை செல்­வதில் இருந்தும் அவர்­களை தடுத்­து ­விட்­டது.

எனினும் பொலிஸார் இது­வரை முன்­னெ­டுத்­துள்ள விசா­ர­ணை­களில் தாய், தந்தை தொடர்­பி­லான சந்­தே­கங்கள் எந்த வகை­யிலும் உறுதி செய்­யப்­ப­ட­வில்லை. அதனால் அவ்­வி­டயம் குறித்து விவா­திப்­ப­தையும் பேசு­வ­தையும் தவிர்ப்­பதும் சிறந்­தது.

ஏனெனில் தற்­போது மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள சாட்­சி­யங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்ட விசா­ர­ணை­களில் கைதுகள் இடம்­பெ­றாத போதும் பாரிய முன்­னேற்­றங்கள் இடம்­பெற்­றுள்­ள­தா­கவே தோன்­று­கி­றது.

அதன்­படி பெற்றோர், குடும்­பத்தார் உள்­ளிட்ட 30க்கும் அதி­க­மா­ன­வர்­களை விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்தி வாக்குமூலங்­களைப் பெற்­றுக்­கொண்­டுள்ள பொலிஸ் குழுக்கள் முக்­கி­ய­மான பல தட­யங்­களை சோத­னை­க­ளுக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளன.

விசா­ர­ணை­களின்படி, பாது­காப்பு சட்­டகம் அற்ற ஜன்­னலால் வந்த சந்­தேக நபர் ஒருவர் சேயாவை கடத்­திக்­கொண்டு திறந்­தி­ருந்த முன் கதவால் சென்­றி­ருக்க வேண்டும் என நம்பும் பொலிஸார், அந்த சந்­தேகநபர் சேயா­வுக்கு மிக பரீட்­ச­ய­மா­ன­வ­ராக இருந்­தி­ருக்க வேண்டும் எனவும் அத­னா­லேயே சத்தம் போடாமல் அவள் இருந்­தி­ருக்க வேண்டும் எனவும் அனு­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் சேயாவை படு­கொலை செய்­து­விட்டு சந்­தேக நபர் அவ­ளது மேலா­டையை கட்­டிலில் மீண்டும் கொண்­டு­ வந்து போட்டுச் சென்­றாரா என்ற சந்­தே­கமும் இல்­லா­ம­லில்லை.

ஏனெனில் ‘வீக்கீ’ சேயாவின் மேலா­டையை மோப்பம் பிடித்­து­விட்டு சுமார் 100 மீற்றர் வரை முன்­சென்று மீண்டும் சேயாவின் வீட்­டுக்கு வர­க் கூடிய பிறி­தொரு வழியே வந்­தது அவ­தா­னிக்­கத்­தக்­கது.

இத­னை­விட மிகக் கொடூ­ர­மாக சேயா பலாத்­காரம் செய்­யப்­பட்­டுள்ள நிலையில், அவளின் கைகளில், வேத­னையால் பிடுங்கி எடுக்­கப்­பட்­டது என கரு­தத்­தக்க சந்­தேக நப­ரு­டை­யது என சந்­தே­கிக்­கப்­படும் கேசங்கள் இருந்­த­மையும் அவ­தா­னிக்­கத்­தக்­கது.

குறித்த கேசத்தின் ஊடாக சந்­தேக நபரை உறு­தி­செய்ய முடியும் என நம்பும் விசா­ர­ணைக்­குழு, பல தட­யங்கள் கு றித்த டீ.என்.ஏ. பரி­சோ­த­னை­களை ஏலவே ஆரம்­பித்­து­விட்­டனர்.

சேயாவின் சட­ல­மா­னது அவ­ளது வீட்­டி­லி­ருந்து 200 மீற்றர் தூரத்­தி­லேயே மீட்­கப்­பட்ட போதும் ஊர் முழு­வதும் பரந்து தகவல் சேக­ரித்த உளவுப் பிரிவு அதி­கா­ரிகள் சந்­தேக நபர் தொடர்பில் ஊகிக்­கத்­தக்க பல தக­வல்­களை வெளிப்­ப­டுத்திக் கொண்­டுள்­ளனர்.

இந்­நி­லையில் சந்­தேக நபர் போதைக்கு அடி­மை­யா­ன­வ­ராக இருக்க வேண்டும் என சந்­தே­கிக்கும் பொலிஸார், அதே­நேரம் அவர் விகா­ர­மான பாலியல் ஆசை­களைக் கொண்­ட­வ­ரா­கவும், பாலியல் உறவு குறித்த வீடி­யோக்­களை அதிகம் பார்ப்­ப­வ­ரா­கவும் இருக்க வேண்டும் என நம்­பு­கின்­றனர்.

அதன்­படி நேற்று முன்­தினம் மூவரை பொலிஸ் பொறுப்பில் எடுத்த புல­னாய்வுப் பிரிவு அவர்­களை விரி­வாக விசா­ரணை செய்து வரு­கி­றது.

இவ்­வாறு பொலிஸ் பொறுப்பில் எடுக்­கப்­பட்­ட­வர்­களில் சேயாவின் வீட்­டுக்­க­ருகில் உள்ள18 வய­தான இளைஞர் ஒரு­வரும், சில வீடு­க­ளுக்கு அப்பால் உள்ள 35 வய­து­டைய ஒரு பிள்­ளையின் தந்­தையும் நடுத்­தர வயதை உடைய மற்­றொ­ரு­வரும் அடங்­கு­கின்­றனர்.

சேயாவின் வீட்­டுக்கு அருகில் உள்ள நபர் அவளை நன்கு அறிந்­தவர் எனவும், சேயாவும் அவனை நன்கு அறிந்­தி­ருந்­த­தா­கவும் குறிப்­பிடும் பொலிஸார், பொலிஸ் பொறுப்பில் உள்ள மூவரும் போதைக்கு அடி­மை­யா­ன­வர்கள் எனவும், பாலியல் உறவு வீடி­யோக்­களை அதிகம் பார்ப்­ப­வர்கள் எனவும் உளவுத் தக­வல்­களை ஆதாரம் காட்­டு­கின்­றனர்.

எனினும் சாட்­சி­யங்கள் ஊடாக குறித்த மூவரும் சந்­தேக நபர்­க­ளாக அடை­யாளம் காணப்­ப­டாத நிலை­யிலும் கைதா­காத நிலை­யிலும் அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கை­க­யாக மன்றின் அனு­ம­தி­யுடன் டீ.என்.ஏ.சோத­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு தீர்­மா­னங்கள் மேற்­கொள்­ளப்­ப­டலாம் என தெரி­கி­றது.

உளவுத் தக­வல்­களின் பிர­காரம் குறித்த ஊரில் பெரும்­பா­லானோர், கஞ்சா, கள்ளச் சாராயம் போன்­ற­வற்­றுக்கு அடி­மை­யா­ன­வர்கள் என்­பதும் தெரி­ய­வந்­துள்­ள­துடன் சேயாவின் சடலம் மீட்­கப்­பட்ட இடத்­திற்கு அருகில் பலர் சாராயம் அருந்­து­வது குறித்தும் தகவல் வெளிப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் சந்­தேக நபர்கள் அல்­லது மனித மிரு­கங்­களை தேடிய வேட்டை தொடர்­கின்­றது.

உண்­மையில் இந்த சிறார்கள் மீதான கொடூ­ரங்கள் தற்­போது இலங்­கைக்கு மிகப்­பெரும் சவா­லாக உரு­வெ­டுத்­துள்­ளன.

யுனிசெப் தகவல்களின்படி ஒவ்வொரு வருடமும் உலகில் ஏதோ ஒரு வன்முறை காரணமாக 1.5 பில்லியன் சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றனர். 2 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்ட 85 வீதமான சிறுவர்கள் உளரீதியிலான தண்டனைகளுக்கும் மன உளைச்சல்களுக்கும் உள்ளாகின்றனர்.

நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு அண்மையில் முன்னெடுத்திருந்த ஆய்வொன்றில் 15ஆயிரம் வழக்குகளில் 5 ஆயிரம் வழக்குகள் (மேல் நீதிமன்றில்) சிறுவர் துஷ்பிரயோகம் குறித்தானது என்பது நிரூபனமாகியுள்ளது.

இவற்றைவிட பொலிஸ் புள்ளி விபரங்களை பொறுத்தவரை சிறுவர்களுக்கு எதிரான பாலியல் உள்ளிட்ட குற்றங்கள் கடந்த இருவருடங்களில் சடுதியாக அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

2012 ஆம் ஆண்டு இவ்வாறான 91 முறைப்பாடுகள் பொலிஸில் பதிவாகியுள்ள நிலையில் 2013 ஆம் ஆண்டு 440 சம்பவங்களும் 2014 ஆம் ஆண்டு 377 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இந்த புள்ளி விபரங்கள் சிறுவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படவேண்டிய மிகையான அக்கறையையே எமக்கு சொல்லுகின்றது.

எனவே சிறுவர்களுக்கு பாதுகாப்பான ஒரு சூழலை உருவாக்கும் பொறுப்பை காவல்துறையினர். மட்டும் சுமத்திவிடாது ஒவ்வொருவரும் ஏற்கவேண்டும்.

அப்போதுதான் நேற்யை சரண்யா, வித்தியா, இன்றைய சேயாவுடன் மனித மிருகங்களின் கொடூர காமப்பசிக்கு முடிவு கட்டலாம். இல்லையேல் நாளை மற்றொரு ….. யாவைப் பற்றிப் பேச வேண்டியிருக்கும்.

எச்சரிக்கை!!!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கூடுவாஞ்சேரி அருகே வீட்டு வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்!!
Next post திண்டுக்கல் கோர்ட்டு அருகே பிரபல ரவுடியை வெட்டி கொன்ற 4 பேர் கும்பல் கைது!!