நீங்க டயட்டை விட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்..!!!
உண்மையை சொல்லப்போனால் எல்லாரும் டயட் பண்ணக்கூடாதுங்க. உங்களுக்கு எடையைக் குறைக்கனும்னா ஒரு ஒரு நல்ல உணவு வல்லுநர் (nutritionist) ஒருவரை அணுகி அவரிடம் ஆலோசனைப் பெற்று ஒரு நல்ல திட்டத்தை வகுத்துக்கோங்க. அதை விட்டுட்டு வெப்சைட்ல இருக்கு அங்க இருக்கு இங்க இருக்குன்னு சொல்லி ஏதாவது ஒரு டயட் பிளானை நீங்களே எடுத்துக்காதீங்க.
இவை பெரும்பாலும் நடைமுறைக்கு உதவாதவை. ஆமாங்க.. எடையை ஆரோக்கியமாக கட்டுக்குள் வைப்பது நல்ல விஷயம் தான். அதிகப்படியான எடையை குறைக்க வேண்டியது அவசியம் தான். ஆனால் அதை ஒரு முழுநேர வேலையாக்கி எடை மொத்தத்தையும் ஒரே வாரத்தில் அல்லது மாதத்தில் குறைக்க வேண்டும் என நினைக்காதீர்கள். இதனால் தான் டயட்டில் இருப்பது உதவாது என்கிறோம்.
மேலும் நீங்கள் உங்கள் உடல் நலத்தை பாதிக்கும் நடைமுறைக்கு ஒவ்வாத முறைகளைக் கையாண்டால், அது உங்கள் உடலை ஊட்டச்சத்துக்கள் இன்றி பசியில் வாடச் செய்துவிடும். அது ஒரு பெரிய உடல் நலப் பிரச்சனைக்கு வழிவகுக்கவும் செய்யும்.
இதுப்போன்ற சொந்த ஐடியாக்கள் உண்மையில் உதவுவதில்லை. நீங்கள் உணவுக்கட்டுப்பாட்டை நிரந்தரமாக நிறுத்த உங்கள் குடும்ப மருத்துவரை அணுகி ஆலோசனையைப் பெறுங்கள்.
அறிகுறி 1
நீங்கள் திடீரென்று அதிக எடையை இழக்கிறீர்கள். இது ஒரு ஆரோக்கியமான அறிகுறி அல்ல. அதுப்போன்று நடந்தால் உடனடியாக உணவுக் கட்டுப்பாட்டை நிறுத்தி, உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.
அறிகுறி 2
உடல் எடை அதிகரிப்பு குறித்த உங்கள் அச்சம். உடல் எடை அதிகரித்த ஒரே ஒரு காரணம் உங்கள் தூக்கத்தைக் கெடுத்து அச்சத்தை தருமானால், முதலில் அதிலிருந்து நீங்கள் வெளியில் வருவது நல்லது
அறிகுறி 3
உங்களுக்கு உணவுக்கட்டுப்பாட்டால் வெறுப்பு ஏற்பட்டாலோ அல்லது அது உங்களுக்கு மிகவும் கடினமாகத் தோன்றினாலோ, அதனை நிறுத்தி விடலாம்.
அறிகுறி 4
எப்போது பார்த்தாலும் கலோரிக் கணக்குகளில் மூழ்கி இருப்பது. உணவுக்கட்டுப்பாடு என்பது இயற்கையாக இருக்க வேண்டும். செயற்கையாக அதை ஒரு வேலையாகச் செய்வதை விட நிறுத்திவிடுவது நல்லது. Show Thumbnail
அறிகுறி 5
உங்கள் எடை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. இப்படி நடந்தால் உங்கள் உணவிலோ அல்லது உடல் நலத்திலோ ஏதோ ஒரு கோளாறு இருக்கிறது என்று பொருள். எனவே உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்
அறிகுறி 6
உங்கள் வெறுப்புணர்ச்சி உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் வெளிப்படுகிறது. தேவையில்லாமல் நீங்கள் உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் கோபப்படுகிறீர்கள் என்றால் உடனடியாக நீங்கள் டயட்டை நிறுத்த வேண்டியது அவசியம்
அறிகுறி 7
வாழ்கை நரகமாக இருக்கிறது. உங்களுடைய சந்தோசம் தொலைந்து விட்டது என்று உங்களுக்குத் தோன்றினால், நீங்கள் உங்கள் உணவுக் கட்டுப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது.
அறிகுறி 8
உங்கள் கனவில் உங்களுக்குப் பிடித்த உணவு வருகிறது. இதன் அர்த்தம் நீங்கள் உங்களுக்குப் பிடித்த உணவை நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் அல்லது வருந்துகிறீர்கள் என்று. எனவே உடனே நிறுத்துங்கள்.
அறிகுறி 9
நீங்கள் எந்த ஒரு காரணமும் இன்றி மிகவும் சோர்வுடன் இருப்பதாக உணர்கிறீர்கள். ஒருவேளை இது உங்கள் உடல் ஊட்டச்சத்திற்காக ஏங்கும் அறிகுறியாக இருக்கலாம்.
அறிகுறி 10
உங்கள் உடல் சக்தி குறைகிறது. நீங்கள் எந்த வேலையும் செய்யாமல் மிகவும் சோர்வடைந்து காணப்பட்டால், அது உங்கள் உணவு சரியாக வேலை செய்யவில்லை என்று பொருள்.
Average Rating