உத்தரப்பிரதேசத்தில் மது குடிக்க பணம் தராத 17 வயது மகனை கத்தரிக்கோலால் குத்திய தந்தை!!

Read Time:1 Minute, 35 Second

c561cf6d-8ac3-460a-a051-6e1215059fdf_S_secvpfஉத்தரப்பிரதேசம் மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்திலுள்ள பாகோவாலி கிராமத்தில் மது குடிக்கப் பணம் தராததால், 17 வயது மகனை கத்தரிக்கோலால் குத்திய தந்தை தலைமறைவாகியுள்ளார்.

பாகோவாலி கிராமத்தைச் சேர்ந்தவர் அகமது(17). மனிதர்கள் உண்ணாத குதிரைப் போன்ற விலங்குகளை வாங்கி, கொல்லும் வேலையைச் செய்து வருகிறார். குடிபோதைக்கு அடிமையான இவரது தந்தை பாதர், மது குடிப்பதற்கு இருநூறு ரூபாய் தரும்படி வற்புறுத்தி உள்ளார். பணம் கொடுக்க மறுத்ததால், மகன் என்றும் பாராமல் அகமதுவை கத்திரிக்கோலால் பலமுறை கடுமையாக குத்தியுள்ளார்.

இதையடுத்து, இம்மாவட்ட மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்ட அகமது, உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மகனைக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிய அவனது தந்தை பாதரை இப்பகுதி போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

தந்தையின் இந்த கொடுமையான செயல் அப்பகுதி மக்களிடையே, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மருந்து போல் குணப்­ப­டுத்தும் உரு­ளைக்­கி­ழங்கு..!!
Next post வேலைக்கு செல்லாததை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை: 2 நாளாக போராடி பிணத்தை மீட்ட தீயணைப்பு வீரர்கள்!!