கூட்டுப்படை தாக்குதலில் 19 தலிபான்கள் சாவு

Read Time:1 Minute, 17 Second

Talipan.jpgஆப்கானிஸ்தானின் தெற்குப் பகுதியில் கூட்டுப் படையினருக்கும் தலிபான்களுக்கும் இடையே புதன்கிழமை நடந்த சண்டையில் 19 தலிபான்கள் கொல்லப்பட்டனர். ஹெல்மன்ட் மாகாணத்திலுள்ள நெüஷத் நகரில் போலீஸ் தலைமையகம் இருக்கும் பகுதியை 200 தீவிரவாதிகள் முற்றுகை இட்டனர். அதன் அருகிலுள்ள சந்தையையும் அவர்கள் சுற்றி வளைத்தனர்.

சந்தையிலுள்ள வியாபாரிகளை வெளியேறுமாறு அவர்கள் கட்டளை இட்டனர். பின்னர், போலீஸ் தலைமையகம் மீது ராக்கெட் மூலம் செலுத்தும் எறிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் மூலம் தாக்குதல் நடத்தினர்.

தலிபான்கள் தாக்கிய போலீஸ் தலைமையகத்தில் ஆப்கன் போலீஸôர், ராணுவத்தினர் மற்றும் கூட்டுப் படையினரும் இருந்தனர். பதிலடியாக இவர்கள் தலிபான் மீது விமானத் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 19 தலிபான்கள் கொல்லப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு கோரி சிறையில் சதாம் உண்ணாவிரதம்
Next post இராக்கில் ஷியா முஸ்லிம்கள் 24 பேர் கடத்திக் கொலை