கண்ணூர் அருகே பெண் குழந்தையை கடத்தியவர் கைது!!

Read Time:1 Minute, 51 Second

2ee96384-682b-4234-ab78-a61c2c3cb37d_S_secvpfகேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள செறுவதூர் பகுதியை சேர்ந்தவர் பிரசாத். இவரது மனைவி பாத்திமா. இந்த தம்பதியின் மகள் சோனா (வயது 6).

கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த சோனா திடீரென்று மாயமானார். அவரது தாயார் பாத்திமா மகளை வீட்டில் தனியாக விட்டுவிட்டு அருகில் தண்ணீர் பிடித்துவிட்டு வருவதற்குள் இந்த சம்பவம் நடைபெற்றது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் காசர்கோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான குழந்தை சோனாவை தேடி வந்தனர்.

இந்த நிலையில் கண்ணூர் பகுதியில் வைத்து சோனாவை போலீசார் மீட்டனர். அந்த பகுதியில் பஸ்சில் ஒரு முதியவர் சோனாவை கடத்தி சென்றபோது போலீசார் அவரை கைது செய்து சோனாவை மீட்டனர்.

போலீசார் விசாரணையில் சோனாவை கடத்தியவர் பெயர் அருள்தாஸ் (வயது 60) என்பதும் செறுவதூர் பகுதியில் பிச்சை எடுத்து வந்த அவர் குழந்தை சோனாவை கடத்தி சென்றது தெரியவந்தது.

அவர் எதற்காக குழந்தையை கடத்தினார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மீட்கப்பட்ட குழந்தையை அதன் பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

கைதான அருள்தாஸ் தமிழகத்தை சேர்ந்தவர் என போலீசார் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆந்திராவில் ஆஸ்பத்திரிகளில் எலி, பாம்புகள் நடமாட்டத்தை கண்காணிக்க கேமிரா!!
Next post இந்தியாவில் நாள்தோறும் 100 கற்பழிப்பு சம்பவங்கள் – அதிர்ச்சி தகவல்கள்!!