இந்தியாவின் 26வது மாநிலமாக இலங்கையை மாற்ற இடமளியோம்!!

Read Time:2 Minute, 12 Second

6227445442124670942udaya-gammanpila2இந்தியாவின் 26வது மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்க இடமளிக்கப்படாது என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

74,000 கோடி ரூபா செலவில் இலங்கை – இந்தியா இடையே கடல்வழி பாலம் அமைப்பதன் மூலம் இந்திய பிரஜைகளுக்கு குறைந்த சம்பளத்தில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீபா உடன்படிக்கையை செயற்படுத்தும் அங்கமாக இது அமைவதாகவும் பாலம் கட்டிய பின் வரிசையாக வரும் இந்தியர்களுக்கு விசா வழங்க வேண்டிவரும் என்றும் கம்மன்பில கூறினார்.

இலங்கையர்களை வைத்து வேலை செய்தால் நாள் ஒன்றுக்கு 1000 ரூபா கொடுக்க வேண்டிவரும் என்பதால் இந்தியர்களை வைத்து நாளொன்றுக்கு 250 ரூபா கொடுத்து வேலையை செயற்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மலையக மக்களைப் போன்று தமது நாட்டவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை இந்தியா வழமையாகக் கொண்டுள்ளதாகவும் இதனால் பல அரசியல், சமூக பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறினார்.

யுத்தக்குற்ற அறிக்கை மூலம் வெள்ளையர்களுக்கு இலங்கையில் வழக்கு வாதிட இடமளிக்க முடியாது என்றும் காலனித்துவம் நிலவிய போதே அதனை செய்ய முடியும் என்றும் ஆனால் இலங்கை இன்று சுயாதீன அரசு என்றும் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (21) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இக்கருத்துக்களை வெளியிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மரண தண்டனை நிறைவேற்றம் மூலம் குற்றங்களை குறைக்க முடியாது!!
Next post 200 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சுரங்கத்திற்குள் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் மீட்பு!!