காபி போட்டபோது ஸ்டவ் வெடித்து தம்பதி கவலைக்கிடம்

Read Time:1 Minute, 18 Second

காபி போட்டபோது ஸ்டவ் வெடித்து கணவன், மனைவி இருவரும் கருகினர். பல்லாவரம் அருகில் உள்ள காமராஜர்புரம் பாத்திமா நகர் தாசன் தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (25). லாரி டிரைவர். இவரது மனைவி அல்போன்சா (22). சமீபத்தில் அல்போன்சாவுக்கு குழந்தை பிறந்து இறந்துவிட்டது. இதனால் கணவன், மனைவி வேதனையில் இருந்தனர். இந்நிலையில், காபி போடுவதற்காக ஸ்டவ் அடுப்பு வைத்தார் அல்போன்சா. எதிர்பாராதவிதமாக ஸ்டவ் வெடித்து குபீர் என்று அவர் மீது தீப்பிடித்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்து தீயை அணைக்க முயன்றார் ஆரோக்கியசாமி. இதில் இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடிவந்து இருவரையும் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதுகுறித்து, சங்கர் நகர் சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் விசாரிக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கவர்ச்சியாக வந்த செல்சியை பற்றி `கமென்ட்’ ஜிம்பாப்வே இளைஞருடன் ஹாரி மோதல்
Next post கணவருடன் ஹைதராபாத் திரும்பினார் சிரஞ்சீவி மகள்