கொடதெனியாவ சிறுமிக்கு ஆதரவாக நுவரெலியாவில் ஆர்ப்பாட்டம்!!

Read Time:1 Minute, 42 Second

2012813020Untitled-5பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகம் மற்றும் படுகொலைகளுக்கு எதிராக புதிய சட்டம் ஒன்றை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் எனக் கோரி, நுவரெலியா மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வட்டவளை கிராம மக்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்களால் இன்று (20) காலை வட்டவளை நகரத்தில் சுமார் ஒரு மணி நேரம் இந்த ஆர்ப்பாட்ட நடவடிக்கையை மேற்கொண்டனர்.

கொடதெனியாவ, பகுதியைச் சேர்ந்த 5 வயதுடைய சேயா செதவ்மி என்ற முன்பள்ளிச் சிறுமி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் எனவும் நாட்டில் மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்த வேண்டும் எனவும் கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அத்தோடு துஷ்பிரயோகங்களை நிறுத்த வேண்டும் எனவும் இதற்கு உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசாங்கத்துக்கு அழுத்தங்கள் கொடுக்கும் முகமாக இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாகன சாரதிகளுக்கு பொலிஸாரின் வேண்டுகோள்!!
Next post இலங்கை வரும் ஐ.நா குழு!!