தம்பிக்கு தொந்தரவு தந்தால் கைது: பாலிவுட் முன்னணி நடிகர் அமீருக்கு எச்சரிக்கை

Read Time:2 Minute, 33 Second

“தம்பியை, உடனடியாக தந்தையிடம் ஒப்படைக்க வேண்டும்; போலீசில் இரண்டு நாளுக்கு ஒரு முறை ஆஜராக வேண்டும். இல்லாவிட்டால், காவலில் வைக்கப்படுவீர்கள்!’ பாலிவுட் முன்னணி நடிகர் அமீர் கானுக்கு, கோர்ட், இப்படி எச்சரிக்கை விடுத்துள்ளது. பாலிவுட்டில் பிரபலமான அமீர் கான் தம்பி பைசல் கானும் ஒரு நடிகர். சில படங்களில் நடித்துள்ளார். அமீர் கானின் வீட்டில் தங்கியிருந்தார். அவர் திடீரென மனநோயால் பாதிக்கப்பட்டார்.அமீர் கானிடம் இருந்து பிரிந்து அவர் தந்தை வசித்து வருகிறார். “என் மகன் பைசல் கான் , மனநோயில் இருந்து விடுபட, என்னிடம் ஒப்படைக்க வேண்டும். அவனை நான் பராமரிக்க அனுமதிக்க வேண்டும்’ என்று, மும்பை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் முன் ஆஜரான அமீர் கான்,” என் தம்பியின் மருத்துவ செலவை செய்யும் அளவுக்கு என் தந்தைக்கு வருமானம் இல்லை. அதனால், என் தம்பியை பராமரிக்கும் பொறுப்பை என்னிடமே விட வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். பைசலை விசாரிக்கும் போது,”அமீர் கானிடம் என்னை ஒப்படைக்க வேண்டாம். என் தந்தையின் பராமரிப்பில் இருக்க அனுமதிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.இதையடுத்து, மாஜிஸ்திரேட், அமீர் கான் வேண்டுகோளை நிராகரித்தார். தன் தீர்ப்பில்,”பைசல் கானை அவர் தந்தையிடம் அமீர் கான் ஒப்படைக்க வேண்டும். இந்த விஷயத் தில், எந்த பிரச்னையும் இனி அமீர் செய்யக்கூடாது. மீறி நடந்து கொண்டால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும். இரண்டு நாளுக்கு ஒரு முறை அவர் போலீசில் கையெழுத்திட வேண்டும்’ என்று மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post விளாத்திகுளத்தில் மோதல் தம்பனையில் மோதல், மன்னார் முன்னரங்கில் மோதல்
Next post தாய்-தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற சிறுமியின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்தது உயிர் ஊசல்