ரூ.மூன்று லட்சம் கொடுத்தால் பைலட் லைசென்ஸ் விமானம் ஓட்டவே வேணாம்…

Read Time:3 Minute, 9 Second

“என்னாது, எட்டு போட் டுட்டியா… அப்படீன்னா, கண்டிப்பா சட்டப்படி, ஒனக்கு டிரைவிங் லை சென்ஸ் தந்து தான் ஆகணும் ராஜா… ஆனா… இன்னும் வர வேண்டியது வரலியே கண்ணு…!’ இப்படி எல்லாம் பேசி அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது, போக்குவரத்து அலுவலகங்களில் தான் பார்க்க முடியும் என்று நீங்கள் நினைத் தால் தவறு. லஞ்சம் தந்தால், விமானத்தை ஓட்ட, பைலட் லைசென்ஸ் கூட வாங்கி விட முடியும். அதற்கு விலை மூன்று லட்சம் ரூபாய்!வெளிநாட்டில், விமானம் ஓட்டும் பயிற்சியை முடித்து திரும்புவோர், இந்தியாவில் உள்ள விமான நிறுவனங்களில் பைலட்டாக பணியாற்ற வேண்டுமானால், விமானம் ஓட்டுவதற்கான லைசென்ஸ் பெற வேண்டும். அதற்கு விமான பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து, விமானத்தை ஓட்டிக் காட்ட வேண்டும். ஓட்டிக் காண்பித்தால் தான் அவர்களுக்கு விமானம் ஓட்டும் லைசென்ஸ் தரப் படும்.விமானிகளுக்கு லைசென்ஸ் தரும் அதிகாரத்தை, தனியார் விமான பயிற்சி நிறுவனங்களுக்கு தந்துள்ளது, மத்திய அரசின் விமானக் கட்டுப் பாட்டு துறை. ஆனால், அதை தவறாக பயன்படுத்துகின்றன சில நிறுவனங்கள்.மகாராஷ்டிர மாநிலம் பாரமதியில் உள்ளது கார்வர் ஏவியேஷன் பயிற்சி நிறுவனம். இதில், தலைமை பயிற்சியாளராக இருந்தர் கேப்டன் அசிம் டெக்சாலி. வெளிநாட்டில் விமானப் பயிற்சி பெற்று திரும்பிய 25 பேரிடம், தலா மூன்று லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு, அவர்கள், விமானம் ஓட்டிக் காண்பிக்காமலேயே, லைசென்ஸ் தந்துள்ளார்.

போலீசார் விசாரித்த போது, டெக்சாலி தலைமறைவாகி விட்டார். புனேயில் உள்ள விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தை வாடகைக்கு எடுத்து, மாணவர்களை ஓட்டச் செய்து, சோதித்ததாக டெக்சாலி, பொய் சான்றிதழ் அளித்துள்ளது தெரியவந்தது.இந்த பெரும் ஊழலில், டெக்சாலிக்கு, விமானப் போக்குவரத்து துறை அதிகாரிகள் பலரும் உடந்தையாக உள்ளனர். புனே விமான நிலையத்தில், மாணவர்கள் பயிற்சி பெற்றதாகவும், விமானம் ஓட்டியதாகவும், அதிகாரிகள், கையெழுத்து போட் டுள்ளதில் இருந்து இது உறுதியாகி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கண்ணீர் ஆற்றில் கிழக்கு மக்கள் மூழ்கித் தவிக்கையில் முதலமைச்சர் எனும் எலும்புத் துண்டொண்றுக்காக சிங்கள மாய சதிவலையில் சிக்கி தவிக்கும் கிழக்கின் மைந்தர்கள். (அதிரடி இணையத்தில் வெளிவந்த ஆக்கம் இது)
Next post மனநலம் பாதித்த பெண்ணிடம் சில்மிஷம் ஆட்டோ டிரைவர் கைது