கண்டியில் சில பகுதிகளுக்கு நாளை நீர் வெட்டு!!

Read Time:1 Minute, 38 Second

131535696Tapகண்டி நகரின் பல பகுதிகளுக்கு நாளைய தினம் 8 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அந்தப் பகுதியில் நீர் வழங்கும் குழாயில் ஏற்பட்டுள்ள நீர்க்கசிவு காரணமாக அதனை திருத்தும் பணிகள் இடம்பெறவுள்ளதால் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

ஹாரிஸ்பத்துவ, கஹவத்தை, அக்குறனை, குருகொடை, தெலம்பு கஹவத்தை, கொஹாகொடை, நுகவெல, ரஜபிஹில்ல, ஹேதெனிய, மெதவல மற்றும் அக்குறனை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கஹல்ல போன்ற பிரதேசங்களில் நீர் விநியோகம் தடைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பூஜாபிட்டிய மற்றும் கண்டி மாநகரசபைக்குட்பட்ட பிரதேசங்களின் அஸ்கிரிய நீர்நிலையத்தில் இருந்து நீர் விநியோகிக்கப்படும் பகுதிகளுக்கும் நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐ.நா. அறிக்கை தொடர்பில் எந்த தீர்மானமும் இல்லை – அரசாங்கம்!!
Next post அதிவேகப் பாதையின் புதிய கட்டண விபரங்கள்!!