தேங்காயெண்ணெய்யுடன் மரக்கறி எண்ணைய் கலந்து விற்பனை!!

Read Time:1 Minute, 33 Second

516967548Oil22தேங்காயெண்ணெய்யுடன் மரக்கறி எண்ணெய்யை கலந்து விற்பனை செய்த கொழும்பு புறக்கோட்டை வியாபாரிகள் இருவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

நுகர்வொர் அதிகாரசபைக்கு கிடைத்த முறைப்பாட்டின்படி அதன் விசாரணைப் பிரிவினரால் கடந்த சில தினங்களாக புறக்கோட்டைப் பகுதியில் தேங்காயெண்ணெய் விற்பனை நிலையங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

குறித்த விற்பனை நிலையங்களில் இருந்து பெறப்பட்ட எண்ணெய் மாதிரிகளை அரச இரசாயண பகுப்பாய்விற்கு அனுப்பி அங்கிருந்து பெறப்பட்ட அறிக்கைக்கு அமைய தேங்காயெண்ணெய்யுடன் மரக்கறி எண்ணெய்யை கலந்து விற்பனை செய்த வியாபாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதன்படி நீதிமன்றத்தில் குற்றங்களை ஒப்புக் கொண்ட குறித்த வியாபாரிகள் இருவருக்கும் தலா 5,000 ரூபா வீதம் தண்டம் அறவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொழும்பு துறைமுக நகர திட்டம் மீண்டும் ஆரம்பம்!!
Next post தினமும் காலையில் ஒரு அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால், பெறும் நன்மைகள்..!!