லெபனான் நாட்டின் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீச்சு: பொதுமக்கள் 27 பேர் பலி

Read Time:3 Minute, 51 Second

Israel.flag.jpgஇஸ்ரேலுக்கும் அதன் பக்கத்து நாடான லெபனா னுக்கும் இடையே நீண்ட நாட்களாகவே மோதல் இருந்து வந்தது. கடந்த 2000- வது ஆண்டில் இருந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் சற்று ஓய்ந்து இருந்தது. இப்போது மீண்டும் போர் வெடித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் ராணுவவீரர்கள் 2 பேரை லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா தீவிரவாதிகள் கடத்திசென்று விட்டனர்.

இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்தும் இந்த வீரர்களை லெபனான் விடுவிக்கவில்லை. லெபனான் அரசு உதவியுடன் இந்த கடத்தல் சம்பவம் நடந்ததாக இஸ்ரேல் புகார் கூறியது. லெபனானுக்கு பதிலடி கொடுத்து அந்தவீரர்களை மிட்போம் என்று இஸ்ரேல் கூறி இருந்தது.

அதன்படி இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று இரவு முதல் லெபனாணின் தெற்கு பகுதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் லெபனானின தெற்கு பகுதியில் உள்ள பாலங்கள் ரோடுகள் தகர்க்கப்பட்டன.

இன்று காலையும் இஸ்ரேல் விமானங்களின் குண்டு வீச்சு தொடர்ந்தது. பெய்ருட் விமான நிலையத்தில் மீது இஸ்ரேல் விமானங்கள் சரமாரி குண்டு வீசின. இதில் அந்தவிமான நிலையத்தின் பெரும்பாலான பகுதிகள் தரைமட்டம் ஆனது. விமானநிலையம் தீ பிடித்து எரிந்தது. இஸ்ரேல் குண்டு வீச்சை தொடர்ந்து லெபனானுக்கு வந்த 2 பயணிகள் விமானம் தரை இறங்காமல் சைப்ரஸ் நாட்டுக்கு திரும்பிச்சென்றன.

இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு லெபனான் படைகளும் எதிர்தாக்குதல் நடத்தியது இதில் இஸ்ரேல் வீரர்கள் 3 பேர் பலியானார்கள். இரு நாட்டு எல்லைப்பகுதியில் நடந்த தாக்குதல்களில் மேலும் 7 பேர் பலியானார்கள். இந்த தாக்குதல்களில் பொதுமக்கள் 27 பேர் பலியாகிவிட்டனர்.

ஏற்கனவே இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையேமோதல் நடைபெற்று வருகிறது. பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவரை கடத்திச் சென்றதை தொடர்ந்து இஸ்ரேல் விமானங்கள் காசா பகுதிக்குள் புகுந்து சரமாரியாக குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

நேற்று நடந்த தாக்குதலில் பாலஸ்தீனத்தின் வெளியுறவுத் துறை அலுவலகம் தரைமட்டம் ஆகி விட்டது. 10 பேர் இதில் காயம் அடைந்தனர். கடந்த ஒரு வாரமாக நடந்த தாக்குதலில் 9 குழந்தைகள் உள்பட 75 பாலஸ்தீனர்கள் பலியாகி விட்டனர்.

இஸ்ரேல் சிறைகளில் உள்ள 1500-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களை விடுதலை செய்யக்கோரி இஸ்ரேல் ராணுவவீரர்களை கடத்திச்சென்றதால் இப்போது இந்த போர் வெடித்துள்ளது.

இஸ்ரேலை சுற்றி உள்ள சிரியா, லெபனான், ஜோர்டான், பாலஸ்தீனம் ஆகிய 4 நாடுகள் எதிரிகளாக உள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இலங்கை அரசிடம் உயிர்ப்பிச்சை கேட்ட விடுதலைப்புலிகள்…
Next post வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு கோரி சிறையில் சதாம் உண்ணாவிரதம்