ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களுக்கு மரண தண்டனை!!

Read Time:1 Minute, 24 Second

436377673Courtsகொலைச் சம்பவம் ஒன்றின் குற்றவாளிகளான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களுக்கு மாத்தறை உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

64 மற்றும் 72 வயதுடைய இருவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

2000ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் திகதி மொரவக்க, கொட்டபொல பிரதேசத்தில் வசிக்கக்கூடிய 33 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையொருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக பிரதிவாதிகள் இருவருக்கும் எதிராக மாத்தறை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருப்பதனால் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்க மாத்தறை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கல்கிஸ்ஸை துப்பாக்கி சூட்டு சம்பவம்; 03 பேர் கைது!!
Next post திவுலப்பிட்டிய ஆர்ப்பாட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கிய பொலிஸ் அதிகாரி திடீர் மரணம்!!