இலங்கை அரசிடம் உயிர்ப்பிச்சை கேட்ட விடுதலைப்புலிகள்…

Read Time:1 Minute, 48 Second

tiger_Sl.Army HELP.jpgதயா மாஸ்டருக்கு கொழும்பில் சிகிச்சை அளிக்க பாதுகாப்பு ஏற்பாடு விடுதலைப் புலிகளின் ஊடக ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டருக்கு கொழும்பில் சிகிச்சை அளிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பி.பி.சி. சிங்கள சேவையான சந்தேசியாவுக்கு கேகலிய ரம்புக்வெல கூறியுள்ளதாவது:

தயா மாஸ்டருக்கு சிகிச்சை அளிப்பதற்காக உரிய பாதுகாப்புகளுடன் கொழும்பு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மனிதாபிமான மற்றும் அவசர உதவியின் அடிப்படையில் கொழும்புக்கு தயா மாஸ்டரை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். முகமாலை வீதியூடாக அவர் கொழும்புக்கு அழைத்து வரப்படுகிறார்.

தயா மாஸ்டரின் குடும்பத்தினர் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பில் சிறிலங்கா சமாதான செயலகத்தினூடாக விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று அவருக்கான இதய சிகிச்சைக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார் கேகலிய ரம்புக்வெல.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வவுனியாவில் புலிகளின் உளவாளியாக செயல்பட்ட(?) புளொட் உறுப்பினர் படுகொலை –பின்னணியென்ன?
Next post லெபனான் நாட்டின் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீச்சு: பொதுமக்கள் 27 பேர் பலி