போராட்டக்காரர்களை சுட உத்தரவிட்டதாக கூறப்படும் அதிகாரி நாடு திரும்பினார்!!

Read Time:1 Minute, 42 Second

559781975Untitled-1வெலிவேரிய – ரதுபஸ்வல போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டதாக கூறப்படும் இராணுவ அதிகாரி நாட்டுக்கு வந்துள்ளார்.

இன்று காலை கட்டாருக்கு சொந்தமான விமானம் ஒன்றில் அவர் நாட்டை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் புலனாய்வுப் பிரிவு பாதுகாப்புடன் அவர் விமான நிலையத்தில் இருந்து வௌியே அழைத்து வரப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, வெலிவேரிய பிரதேசத்தில் குடிநீர் விஷமாகியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப் பிரதேச மக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள ஆணை பிறப்பித்த அதிகாரியை கைதுசெய்யக் கோரி, பூஜித தேரிபெஹெ சிறிதம்ம தேரர் விமான நிலையத்திற்கு முன்பான இன்று எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டார்.

அத்துடன் குறித்த இராணுவ அதிகாரி இன்று நாட்டுக்கு வருவதை அறிந்த ரதுபஸ்வல பிரதேச மக்கள் காலை விமான நிலைய சூழலில் கூடியிருந்ததாகவும் எமது செய்தியாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ததேகூவுக்குள் சிக்கலை ஏற்படுத்தும் அவசியம் சிலருக்கு உள்ளது!!!
Next post தமிழகத்தில் கரையொதுங்கிய மர்மப் படகு – இலங்கையைச் சேர்ந்ததா?