ரூ.15 லட்சம் மதிப்பில் பழனியில் கிரீன் டாய்லெட்!!

Read Time:3 Minute, 29 Second

f489edb6-955e-48a5-a6b5-59c8a1125235_S_secvpfபழனியில் பக்தர்கள் வசதிக்காக யானைப் படிக்கட்டு உள்பட 4 இடங்களில் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் ‘கிரீன் டாய்லெட்’ அமைக்கும் பணி நடந்து வருகிறது.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு, தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும், பல நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிகின்றனர்.

தினமும் 15 ஆயிரம் முதல், 17 ஆயிரம் பக்தர்களும், பங்குனி உத்திரம், தைப்பூசம் மற்றும் கார்த்திகை தீபம் போன்ற திருவிழா காலங்களில், ஒன்றரை லட்சம் பக்தர்களும் வருகை புரிகின்றனர்.

பக்தர்களின் வசதிக்காக, பழனி மலையில் ’ரோப்கார்’ மற்றும் ‘வின்ச்’ ரெயில் உள்ளிட்ட வசதிகளும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. தவிர, இங்கு வரும் பக்தர்களுக்கு கழிப்பறை வசதி, மலையின் மேல் பகுதியில் மட்டுமே உள்ளது. அடிவாரத்தில் இருந்து படியேறும் வழியில் இல்லை. எனவே இயற்கை உபாதையை கழிக்க சிரமப்படுகின்றனர்.

இந்நிலையில் பழனியில் யானைப்படிக்கட்டு உள்பட 4 இடங்களில் ‘கிரீன் டாய்லெட்’ அமைக்கும் பணி நடந்து வருகிறது.

பக்தர்களின் வசதிக்காக 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ‘கிரீன் டாய்லெட்’ அமைக்கும் பணி நடந்து வருகிறது. அடிவாரத்தில் இருந்து மலை வரை 700 படிகள் உள்ளன. படி ஏறி வரும் பக்தர்கள், இயற்கை உபாதையை கழிக்க வசதியாக, 4 இடங்களில் ‘கிரீன் டாய்லெட்’ அமைக்கப்படுகிறது.

படி அருகே பாறையாக இருப்பதால் அந்த இடத்தில் கழிப்பறைக்கு தண்ணீர் வசதி செய்ய முடியாது. படியில் இருந்து தளமாக உள்ள இடங்களை தேர்வு செய்து, அமைத்துள்ளனர்.

இந்த 4 இடங்களில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகள், பைப் மூலம், அடிவாரத்துக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து கழிவுகள், டிரீட்மென்ட் பிளான்ட்டுக்கு கொண்டு செல்லப்படும்.

இது வரை முக்கிய விழாக்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் போது மட்டும், முதலுதவி சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வந்தன. தற்போது தினசரி பழனி மலைக்கு வரும் பக்தர்கள், மூச்சுத்திணறல், கை, கால் வலி உள்ளிட்ட உடல் நலப்பிரச்சினைகள் ஏற்படும் போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் நிரந்தர முதலுதவி மையம், இடும்பன் படிக்கட்டு அருகே அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு நர்ஸ், உள்ளிட்டோர், 24 மணி நேரமும் செயல்படுவர்.

மேற்கண்ட தகவலை பழனி தேவஸ்தான இணை ஆணையர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதிர்ஷ்டம் அடிக்கும் என்ற மூடநம்பிக்கையில் 9 வயது சிறுமியை கொன்று ரத்தம் குடித்த கொடூரத் தந்தை கைது!!
Next post கோபி அருகே மகனின் அவசர காதல் திருமணத்தால் தந்தை விஷம் குடித்து தற்கொலை!!