வவுனியாவில் புலிகளின் உளவாளியாக செயல்பட்ட(?) புளொட் உறுப்பினர் படுகொலை –பின்னணியென்ன?

Read Time:2 Minute, 31 Second

PLOTE-COLOR LOGO2.jpgநேற்றையதினம் புளொட் அமைப்பின் யாழ்.மாவட்டப் பொறுப்பாளாரான வோல்டர் என்றழைக்கப்படும் செபஸ்ரியான் இருதயராஜன் (வயது46) யாழ்ப்பாணத்தில் வைத்து புலிகளின் பிஸ்டல் குழுவைச் சேர்ந்த கொலைஞர்களால் படுகொலை செய்யப்பட்டது நீங்கள் அறிந்ததே. இதேவேளை இன்றையதினம் புளொட் அமைப்பின் வவுனியா மாவட்டப் பொறுப்பாளரான ஆட்டோபவன் அல்லது இராணுவபவன் எனும் இரட்ணம் சிறீஸ்கந்தராஐh (வயது42) ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி பவன் வவுனியா மாவட்டப் பொறுப்பாளராகவிருந்த காலகட்டத்திலேயே புளொட் அமைப்பின் முக்கியஸ்தரும் சமூகசேவகருமான பாரூக், புளொட் அமைப்பின் இடியன்செல்வம ஆகியோர் புலிகளால் கடத்தப்பட்டதும் புளொட்டின் முக்கியஸ்தரான திருப்பதி மாஸரர் உட்பட சிலபுளொட் உறுப்பினர்கள் புலிகளால் படுகொலை செய்யப்பட்டதும் நடைபெற்றது.

வவுனியா மாவட்டத்தில் புளொட்டுக்கு எதிராக புலிகளால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து அராஐக நடவடிக்கையிலும் பின்னணியில் இருந்து புலிகளின் உளவாளிகளாக செயல்பட்ட சில புளொட் உறுப்பினர்களில் மேற்படி பவனும் ஒருவரென நம்பப்படுகின்றது.

நேற்றையதினம் இரவு வீரமக்கள்தின சுவரொட்டிகளை வவுனியாவில் ஒட்டிக் கொண்டிருந்த புளொட் உறுப்பினர்கள் மத்தியில் ஆட்டோவொன்றில் வந்த சிலர் சினேகிதபூர்வமான முறையில் இவரை மட்டும் அழைத்துச் சென்றுள்ளனர்.

இன்றுகாலை கண்கள் கட்டப்பட்ட நிலையில் தலையில் மூன்று துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இவரது கொலையின் பின்னணியென்ன? இவரது கொலைக்கு யார் காரணமென்பது? இன்னும் மர்மமாகவே உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post உடல்நிலை மோசமானதால் வேலூர் ஆஸ்பத்திரியில் முருகன் அனுமதி-
Next post இலங்கை அரசிடம் உயிர்ப்பிச்சை கேட்ட விடுதலைப்புலிகள்…