ஜெனிவா கூட்டத் தொடர் நாளை ஆரம்பம்!!

Read Time:1 Minute, 46 Second

1635830600hrwஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 30வது கூட்டம் நாளை (14)ஆரம்பமாவுள்ளது.

47 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தக் கூட்டத் தொடர் ஒக்டோபர் மாதம் 02ம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கடந்த ஆண்டு சமர்பிக்கப்பட்ட பிரேரணை தொடர்பான விஷேட விசாரணை அறிக்கை இந்த கூட்டத் தொடரின் போது சமர்பிக்கப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தினால் தயார்படுத்தப்பட்டுள்ள இந்த விஷேட அறிக்கையின் பிரதி இலங்கை அரசாங்கத்திடம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக தஹிந்து செய்தி வெளியிட்டிருந்தது.

அத்துடன் குறித்த அறிக்கை எதிர்வரும் 30ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்பிக்கப்படவுள்ளது.

இதேபோன்று முன்னதாக 2009, 2012, 2013 மற்றும் 2014ம் ஆண்டுகளிலும் இலங்கைக்கு எதிரான பிரேரணைகள் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்பிக்கப்ட்டிருந்தது..

எவ்வாறாயினும் குறித்த அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதில் அறிக்கையை வழங்குவதற்கு தயார்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மரக் கடத்தலில் ஈடுபட்டவர் கைது!!
Next post கிணற்றில் தவறி விழுந்து சிறுமி பலி!!