ஜெனிவா செல்கின்றார் சிவாஜிலிங்கம்!!

Read Time:1 Minute, 4 Second

1750033513MKயாழில் இருக்கும் இந்திய துணைத் தூதரகத்திற்கு நாளை மனு ஒன்றை கையளிக்க உள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் என மேற்கொள்ளப்படுகின்ற நடைபவணியின் நிறைவு நாளான நாளை இந்த மனு கையளிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் சில தினங்களில் தான் உள்ளிட்ட குழுவினர் ஜெனிவா செல்லவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் உள்ளிட்ட குழுவினர் ஜெனிவா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிபா உடன்படிக்கை பொய்யானது – அரசாங்கம் மறுப்பு!!
Next post மரக் கடத்தலில் ஈடுபட்டவர் கைது!!