நடைபாதை வியாபாரிகளை அச்சுறுத்த வேண்டாம்: மஹிந்தவிற்கு நீதிமன்றம் எச்சரிக்கை!!

Read Time:1 Minute, 37 Second

9132160752011478472coaurt-Lபுறக்கோட்டை பிரதேச நடைபாதை வியாபாரிகளுக்கு அழுத்தம் பிரயோகிக்கக் கூடாதென சுயதொழில் புரிவோர் சங்கத்தின் முன்னாள் தலைவர் மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட மூவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மஹிந்த கஹந்தமவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை இன்று இடம்பெற்றது.

சந்தேகநபர்களின் அடியாட்கள் நடைபாதை வியாபாரிகளை தாக்கி அச்சுறுத்தல் விடுத்து வருவதாக வழக்கு தொடுநர் தரப்பில் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது விசாரணை நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தும் என்பதால் சந்தேகநபர்களுக்கு எச்சரிக்கை விடுக்குமாறு சட்டத்தரணி கேட்டுக் கொண்டார்.

அந்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான் கிஹான் பிலபிட்டி சந்தேகநபர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

சம்பவம் தொடர்பில் மேலும் 150 நடைபாதை வியாபாரிகளிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக கொழும்பு குற்ற விசாரணை பிரிவினர் நீதிமன்றில் அறிவித்தனர்.

வழக்கு டிசம்பர் 7ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சஷி வீரவன்ச தொடர்பான விசாரணை நிறைவு!!
Next post 5 லட்சம் ரூபாவிற்காக சிறுநீரகத்தை பறிகொடுத்த இளைஞன்!!