பாராளுமன்ற விவாதத்தில் 70% காலம் தேசிய அரசாங்கத்திற்கு!!

Read Time:1 Minute, 53 Second

16465661331369184637parliment-inside2பாராளுமன்ற விவாவத்தில் 70% நேரத்தை தேசிய அரசாங்க தரப்பிற்கு வழங்க கட்சித் தலைவர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றது.

அதன்போது ஆளும் எதிர்கட்சிகளுக்கு வழங்கப்படும் விவாத காலம் குறித்து ஆராயப்பட்டது.

அதன்போது ஆளும் கட்சிக்கு 70% காலமும் எஞ்சிய காலத்தை எதிர்கட்சிக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேசிய அரசாங்கத்திற்கு ஒதுக்கப்படும் 70% காலத்தில் ஐதேகவிற்கு 40% காலமும் ஐமசுமு.க்கு 30% காலமும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தேசிய அரசாங்கத்தில் 201 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக சபை முதல்வர் லக்ஷமன் கிரியெல்ல அறிவித்துள்ளார்.

இதன்படி பாராளுமன்றில் ஆசனம் ஒதுக்குமாறு சபாநாயகர் பாராளுமன்ற உத்தியோகத்தர்களுக்கு பணித்துள்ளார்.

இதேவேளை, பாராளுமன்றில் தங்களுக்கு கட்சித் தலைவர்கள் அந்தஸ்த்து வழங்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஸ் குணவர்த்தன, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அதனை எழுத்து மூலம் அறிவிக்கும்படி சபாநாயகர் கோரியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆட்டோ பஸ் மோதி விபத்து: இருவர் பலி!!
Next post அரசியல் கைதிகளின் உரிமை மீறல்: உடன் விடுதலை செய்க!!