தாஜுதீனின் கையடக்கத் தொலைபேசியை ஆய்வு செய்ய நீதிமன்றம் அனுமதி!!

Read Time:1 Minute, 42 Second

20210413242003433969t2வசீம் தாஜுதீன் கொலை வழக்கின் சாட்சியாளருக்கு அழுத்தம் விடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஸ்ட சட்டத்தரணி டிலான் ரத்நாயக்க கோட்டை நீதவான் நீதிமன்றில் இதனை அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் குற்றத்தடுப்பு பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

தாஜுதீன் பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசி கிடைத்துள்ளதாக குறிப்பிட்ட சட்டத்தரணி, அதன் ´மெமரி காட்´டினை கொழும்பு பல்கலைக்கழக கனிணி பிரிவிற்கு அனுப்பி அறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்ள நீதிமன்றின் அனுமதியை கோரியுள்ளார்.

அந்த கோரிக்கையை ஆராய்ந்த மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் அதற்கு அனுமதி அளித்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் வழக்கு ஒக்டோபர் 22ம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டதுடன் அன்றைய தினம் விசாரணை அறிக்கைகளை சமர்பிக்குமாறு இரகசிய பொலிஸாருக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரு பஸ்கள், ஜீப் மோதி விபத்து: நால்வர் பலி!!
Next post பிரதியமைச்சர்களாக இருவர் பதவியேற்பு!!