இலங்கை விமானியின் சாமர்த்தியத்தால் 105 பயணிகளின் உயிர் காக்கப்பட்டது!!

Read Time:1 Minute, 40 Second

1211636895flightவிமானியின் சாமர்த்தியத்தால் 105 பயணிகள் காப்பாற்றப்பட்ட சம்பவமொன்று சென்னையில் இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து இந்திய ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தி வருமாறு,

இலங்கையில் இருந்து 105 பயணிகளுடன் நேற்று இரவு விமானம் ஒன்று சென்னைக்கு புறப்பட்டு வந்தது. இன்று அதிகாலை 2.30 மணியளவில் அந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் தரை இறங்க முயன்றது.

அப்போது விமானத்தின் சக்கரத்தில் பழுது ஏற்பட்டிருப்பதை விமானி கண்டு பிடித்தார். இதையடுத்து மிகவும் லாவகமாக அந்த விமானத்தை தரை இறக்கினார். விமானியின் சாமர்த்தியத்தால் சக்கரம் பழுதான விமானம் தரையிறங்கி ஓடுபாதையிலேயே நின்று விட்டது.

பின்னர் விமானத்தை அங்கிருந்து இழுத்து விமானம் நிற்கும் பகுதிக்கு கொண்டு வந்தனர். அதில் இருந்த 105 பயணிகளும் பத்திரமாக இறக்கி விடப்பட்டனர். விமானியின் சாமர்த்தியத்தால் அனைத்து பயணிகளும் தப்பினார்கள்.

பின்னர் விமானத்தின் சக்கரங்கள் சரி செய்யப்பட்டது. அதன் பிறகு அதிகாலை 4 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் காலை 6 மணிக்கு புறப்பட்டு சென்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜெனீவா கூட்டம் நெருங்குகிறது: ‘இலங்கை: நீதிக்கான தேடல்’ புதிய ஆவணப்படத்தால் இலங்கைக்கு தலையிடி!!
Next post இரு பஸ்கள், ஜீப் மோதி விபத்து: நால்வர் பலி!!