மகனைக் கொன்ற தந்தை தற்கொலை: தாய், 4 மாத குழந்தை காயம்!!

Read Time:1 Minute, 32 Second

169871431Untitled-1மட்டக்களப்பு – வவுணதீவு – பருத்திச்சேனையில் இன்று நண்பகல் தந்தை ஒருவர் மகனை கத்தியால் குத்தி கொலை செய்து தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சம்பவத்தை கண்டு பயந்து மனைவி தனது 4 மாத குழந்தையுடன் கிணற்றில் பாய்ந்ததில் இருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம்.நஸீர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

தாமோதரம் வினோத் என்ற 8 வயதான வாய்பேச முடியாத தனது மகனை தந்தை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் தாமோதரம் மகேந்திரன் ஆகிய 30 வயது தந்தை தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

சம்பவத்தை கண்டு பயந்த மகேந்திரன் குணலக்ஷ்மி என்ற தாய் தனது 4 மாத குழந்தையான மகேந்திரன் தனுவுடன் கிணற்றில் பாய்ந்தபோது காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக வவுணதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது; கட்சிக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் – சாந்தனி சந்திரசேகரன்!!
Next post ஜா-எல கொள்ளை – தகவல் வழங்கினால் 5 இலட்சம் ரூபா பரிசு!!