ஜா-எல கொள்ளை – தகவல் வழங்கினால் 5 இலட்சம் ரூபா பரிசு!!

Read Time:1 Minute, 54 Second

1984054612Untitled-1ஜா-எல பிரதேச நிறுவனம் ஒன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பற்றிய சீ.சி.டி.வி கெமரா ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர் தொடர்பில் சரியான தகவல் வழங்குபவர்களுக்கு 5 இலட்சம் ரூபா பரிசு வழங்கப்படும் என குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் குறிப்பிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 15ம் திகதி ஜா-எல பிரதேச நிறுவனம் ஒன்றுக்குள் நுழைந்த இனம் தெரியாத இருவர் அங்கு பணிபுரிந்த பெண்களை மிரட்டி கொள்ளையிட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்கள் ஆறு இலட்சம் ரூபாய் பணம் மற்றும் 53,760,000 பெறுமதியான தங்க நகைகளையும் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

எனினும் இந்த சம்பவம் இடம்பெற்ற வேளை குறித்த நிறுவனத்திற்கு அருகிலிருந்த வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கெமராவில் இதனுடன் தொடர்புடைய மற்றொரு நபரின் உருவம் பதிவாகியுள்ளது.

இதன்படி குறித்த நபரின் படம் தற்போது ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதோடு அவர் பற்றி அறிந்தால் தகவல் வழங்குமாறும் பொலிஸாரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்தவர்கள் 011 223 62 22 , 011 223 61 31, 0718 591 603 அல்லது 0785 308 291 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்க முடியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மகனைக் கொன்ற தந்தை தற்கொலை: தாய், 4 மாத குழந்தை காயம்!!
Next post ஜோசப் மைக்கல் பெரேராவின் மகன் கைது!!