விக்னேஷ்வரன் மீது மாவை பகிரங்க குற்றச்சாட்டு!!

Read Time:1 Minute, 55 Second

1320491996Untitled-1வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் மீது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

வவுனியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது. அதில், விக்னேஷ்வரன் மீது பகிரங்கமாகவே அவர் குற்றம்சாட்டினார்.

இந்தநிலையில் சேனாதிராஜா நேற்று இந்திய ஊடகமான ‘தி இந்து’ செய்தியாளரிடம் கூறியதாவது:

பாராளுமன்ற தேர்தலின்போது, விக்னேஷ்வரனின் நடத்தை கேள்விக்குறியாக இருந்தது. தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் செயல்பாடுகள் கட்சிக்கு எதிராக இருந்தன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களை ஆதரித்து ஓர் அறிக்கைகூட வெளியிடவில்லை. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து வரும் 11-ம் திகதி நடக்கும் கட்சி செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும், என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கை ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் வரும் 30-ம் திகதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வுகள் இம் மாதம் 14-ம் திகதி தொடங்கி அக்டோபர் 2-ம் திகதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்ந்த நால்வர் கைது!!
Next post நிதி குற்ற விசாரணைப் பிரிவில் கெஹலிய!!