ஜானக பெரேராவின் வழக்கு விஷேட நீதிமன்றத்துக்கு மாற்றம்!!

Read Time:1 Minute, 38 Second

494891906Untitled-1மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவின் கொலை வழக்கு, பிரதம நீதியரசரின் உத்தரவுக்கு அமைய அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இருந்து, அனுராதபுரம் விஷேட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஜானக பெரேரா உள்ளிட்ட 29 பேர் தற்கொலை குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். இது குறித்த வழக்கு விசாரணைகள் அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தன.

தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய அனைத்து வழக்கு விசாரணைகளுக்காகவும் அனுராதபுரம் விஷேட நீதிமன்றம் நிறுவப்பட்டுள்ளமையால், ஜானக பெரேராவின் வழக்கு விசாரணைகளையும் குறித்த நீதிமன்றத்திலேயே தொடர உத்தரவிடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட இருவரில் இரண்டாம் சந்தேகநபர் தமது குற்றத்தை அண்மையில் ஒப்புக் கொண்டதால் 20 வருடங்கள் கடுழீய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் முதலாவது சந்தேகநபர் தன்னை நிரபராதி என வாதிட்டு வருவதால் வழக்கு விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரு விருப்பு வாக்குக்காக சம்பிக்க, கம்மன்பில செலவிட்டது எவ்வளவு தெரியுமா?
Next post இலங்கை அகதிகள் முகாமில் இளம் மனைவி தீக்குளித்து தற்கொலை!!