மாயாதுன்னவின் இராஜினாமாக் கடிதம் இதுவரை கிடைக்கப் பெறவில்லையாம்!!

Read Time:1 Minute, 51 Second

1111382433Untitled-1பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அண்மையில் இராஜினாமா செய்வதாக அறிவித்த சரத்சந்திர மாயாதுன்னவின் இராஜினாமாக் கடிதம் இதுவரை தேர்தல்கள் செயலகத்திற்கு கிடைக்கப்பெறவில்லை எனத் தெரியவந்துள்ளது.

இவர் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் தேசியப் பட்டியலில் இம்முறை பாராளுமன்றத்துக்கு தெரிவானார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இம்முறை பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பித்த முதல் நாளே அவர் இராஜினாமா குறித்து அறிவித்தார்.

இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு மக்கள் விடுதலை முன்னணியால் பிமல் ரத்னாயக்கவை தெரிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இராஜினாமா செய்வதாயின் அது குறித்து தேர்தல்கள் செயலகத்திற்கு, பாராளுமன்ற பொதுச் செயலாளரால் எழுத்து மூலம் அறிவிக்கப்பட வேண்டும்.

இதனையடுத்து நீக்கப்பட்ட உறுப்பினர் பதவிக்கு மற்றொருவரை பரிந்துரை செய்யுமாறு சம்பந்தப்பட்ட கட்சிக்கு தேர்தல் ஆணையாளர் தெரியப்படுத்துவார்.

பின்னர் பரிந்துரைக்கப்படும் நபரை தேர்தல்கள் ஆணையாளர் ஏற்றுக் கொண்ட பின்னர் மற்றைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எரிபொருள் விலை விரைவில் குறைய வாய்ப்பு!!
Next post பிரதி, இராஜாங்க அமைச்சர்கள் நாளை சத்தியப்பிரமாணம்!!