தகாத செய்கைகளால் மாணவியின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் கைது!!

Read Time:1 Minute, 35 Second

8a4ed252-21a1-4052-b030-74adea5fc6f2_S_secvpfமறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர்.ராதா கிருஷ்ணன் அவர்களின் நினைவாக ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்ட அதே நாளில், மாணவியின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள பள்ளியில் படித்து வரும் 16 வயது மாணவி ஒருவர், கடந்த 1 ஆம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அவரது பெற்றோர்கள் மீளா சோகத்தில் ஆழ்ந்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக அந்த மாணவி எழுதிய கடிதம், நேற்று முன் தினம் போலீசாருக்கு கிடைத்தது. அதில் தனது இயற்பியல் ஆசிரியரான, ஸ்ரீ நிவாசின் செய்கைகளால் தான் மிகவும் அசிங்காமாய் உணர்ந்ததாக அந்த மாணவி குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ஆசிரியர் ஸ்ரீ நிவாசை நேற்று கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 68 வயதில் டி.வி. பெண் நிருபரை திருமணம் செய்துகொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்!!
Next post கொலை செய்த மகளின் பிணத்துக்கு லிப்ஸ்டிக் பூசி, சென்ட் அடித்த படுபாதகி, இந்திராணி!!