செல்லக்கதிர்காமம் பகுதியில் கொலை: நால்வர் கைது!!

Read Time:1 Minute, 24 Second

6829214542807435752செல்லக்கதிர்காமம் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை கதிர்காமம் பொலிஸாரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 4ம் திகதி இரவு செல்லக்கதிர்காமம் – மருவங்குவ பகுதியில் 36 வயதான ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படியே இவர்கள் கைதாகியுள்ளனர்.

மேலும் பிரதான சந்தேகநபர் வசம் இருந்து துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபர்கள் கதிர்காமம், செல்லக்கதிர்காமம் மற்றும் ஹூங்கம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை நாளை திஸ்ஸமஹராம நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேர்தல் காலத்தில் நடைபெற்ற சில உண்மைகளை போட்டுடைத்த ஜனாதிபதி!!
Next post இலங்கை விடயம் – சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகம் முன் தொடர் போராட்டம்!!