தேர்தல் காலத்தில் நடைபெற்ற சில உண்மைகளை போட்டுடைத்த ஜனாதிபதி!!

Read Time:5 Minute, 42 Second

851500537Untitled-1ஜனவரி 5ம் திகதி இரவு மருதானையில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதி பிரசார நடவடிக்கைகளின் போது, பாதுகாப்புக் காரணங்களின் நிமித்தம் செல்ல முடியாது எனக் கூறி, பாதுகாவலர்கள் மற்றும் சாரதி தன்னை வீட்டில் தனியாக விட்டுச் சென்றதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

இச் சந்தர்ப்பத்தில் ரணில் விக்ரமசிங்கவே தனது வீட்டுக்கு வந்து தன்னை கூட்டத்துக்கு அழைத்துச் சென்றதாக அவர் இன்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 69வது ஆண்டு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது சுட்டிக்காட்டினார்.

இன்று சிறிகொத்தவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் பிரச்சார நடவடிக்கைகளின் இறுதித் தினமான ஜனவரி 5ம் திகதி எம்பிலிபிடிய, களுத்துறை, மொரட்டுவை, உள்ளிட்ட கூட்டங்கள் பலவற்றில் தான் கலந்துகொண்டதாக அவர் இதன்போது கூறினார்.

இதில் இறுதி பிரசார கூட்டம் மருதானையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததாக குறிப்பிட்ட ஜனாதிபதி, மற்றைய அனைத்து கூட்டங்களிலும் கலந்துகொண்டமையால் பாதுகாப்பு சிக்கல் இருப்பதாகவும் அதனால் மருதானை கூட்டத்திற்கு அழைத்து செல்ல முடியாது எனவும் கூறி பாதுகாவலர்கள் மற்றும் சாரதி தன்னை வீட்டினுள் தனியாக விட்டுச் சென்றதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதன்போது “மருதானை கூட்டத்துக்கு நீங்கள் வரும் வரைதான் காத்திருக்கிறோம்..” என ரணில் விக்ரமசிங்க அழைப்பை மேற்கொண்டு கூறினார். எனினும் தனது நிலையை தான் எடுத்துக் கூறியபோது, யாரும் தேவையில் நான் வந்து உங்களை அழைத்துச் செல்கிறேன் எனக் கூறிய தற்போதைய பிரதமர் சில நிமிடங்களுக்குள்ளேயே எனது வீட்டுக்கு வந்தார்.

இதன்போது ரவி கருணாநாயக்கவும் உடனிருந்தார், எனவும் மைத்திரிபால சிறசேன மேலும் கூறினார்.

பின்னர் தன்னை பிரசார மேடைக்கு அழைத்துச் சென்ற ரணில் சுமார் பத்தாயிரம் பேர் கொண்ட கூட்டத்துக்கு நடுவில் சென்று கைகளை அசைத்து பிரச்சாரம் செய்ததாகவும் குறிப்பிட்டார்.

ரணில் விக்ரமசிங்க கைகளை உயர்த்திய படி கூறியது “எமது கூட்டத்தில் உங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை..” என்பதே என்ற உண்மையையும், ஜனாதிபதி இங்கு வௌியிட்டார்.

அத்துடன் நவம்பர் 22ம் திகதிக்கு முன்னர் பொது வேட்பாளராக களமிறங்குவது குறித்து, தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து ஒரு விநாடி கூட கலந்துரையாடியதில்லை எனவும் அவர் கூறினார்.

மேலும் அப்போது பாராளுமன்றத்தில் அமைச்சர் ஆசனத்தில் தான் இருந்த வேளை, ரணில் தன்னை நோக்கி “நாங்கள் செல்வோம்…” என்றபடி கண்களால் சமிங்சை செய்ததாகவும் சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் வீட்டுக்கு சென்று கலந்துரையாடவே தாம் திட்டமிட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தான் ரணில் விக்ரமசிங்கவின் காரில் ஏறி சென்றபோது பாராளுமன்றத்தின் முன்னாலுள்ள குளத்தை கடந்த வேளை சொப்பர் (Chopper) ஒன்று சென்றதாகவும் சில நிமிடங்கள் தாமதித்திருந்தால் அந்த சொப்பரில் வந்தவரால் தான் தடுக்கப்பட்டிருப்பேன் எனவும் மைத்திரிபால சிறிசேன இதன்போது குறிப்பிட்டார்.

மேலும் தான் ஜனாதிபதியாக ஐக்கிய தேசியக் கட்சி வழங்கிய ஆதரவை ஒருபோதும் மறக்க மாட்டேன் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

அதேபோல் அனைவரும் 24 மணித்தியாலங்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என கூறிய ஜனாதிபதி, எதிரி தற்போது தோற்றுள்ளதால் குறைத்து மதிப்பிடக் கூடாது எனவும் கூறினார்.

மேலும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல நேர்மையுடன் செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது சுட்டிக்காட்டினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 14ம் திகதி ரணில் இந்தியா விஜயம்!!
Next post செல்லக்கதிர்காமம் பகுதியில் கொலை: நால்வர் கைது!!