இளம் யுவதி மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தில் மூழ்கி பலி!!

Read Time:1 Minute, 25 Second

1552792174Untitled-1மஸ்கெலியா – மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்தில் யுவதி ஒருவர் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (06) காலை 08.30 அளவில் குளிப்பதற்காக சென்ற குறித்த யுவதி தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

இவர் மஸ்கெலியா – அப்கட் பிரதான வீதியில் அம்மன் கோவிலுக்கு அருகாமையில் உள்ள பிரதேசத்தை சேர்ந்த ரத்னவேல் ஞானேஸ்வரி (29 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அப் பிரதேச மக்கள் ஞானேஸ்வரி தவறி விழுந்ததை கண்டுள்ளனர். பின் இச் சம்பவம் தொடர்பாக மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களின் உதவியோடு காலை 09.30 அளவில் சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலம் மஸ்கெலியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நானும் ஜனாதிபதியும் தூக்கமற்ற இரு சாரதிகள் – பிரதமர்!!
Next post மீண்டும் இனவாதத்திற்கு இடமளிக்க முடியாது!!