சம்பந்தனுடன் இந்திய அதிகாரிகள் அவசர சந்திப்பு: சிறிதரன், அரியநேந்திரன் ஆகியோரின் உளவுத்துறை தொடர்புகள்; பற்றி கேள்வி..

Read Time:3 Minute, 51 Second

TNA.sritharan.001aa
அண்மைக் காலமாக பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனால் நடத்தப்படும் jvpnews என்னும் பெயருடைய இணையதளத்தில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை இந்திய உளவுதுறையான றோவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திகள் தொடர்பிலும் அதேவேளை, சிறிதரனுக்கு பாக் உளவுத்துறையான ஜ.எஸ்.ஜ உடன் தொடர்பிருப்பதாக வெளியான செய்திகள் தொடர்பிலும் குறித்த அதிகாரிகள் சம்பந்தனுடன் ஆலோசனை நடத்தியிருக்கின்றனர்.

சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் சூழலில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களே இப்படியான செய்;திகளை வெளியிடுவதன் நோக்கம் பற்றி அந்த அதிகாரிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

இப்படியான செய்திகள் இந்திய – இலங்கை உறவை பாதிப்பதுடன் தமிழ் மக்களுக்கும் இந்தியா தொடர்பில் தவறான செய்திகளை வழங்குகின்றது.

இது தொடர்பில் சம்பந்தன் கவனம் செலுத்த வேண்டுமென்றும் மேற்படி இந்திய அதிகாரிகள் வலியுறுத்தியதாக, அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில இணையங்களில் வெளியாகிருப்பது போன்று சிறிதரனுக்கு பாக்கிஸ்தானிய தூதரகத்தோடு தொடர்புகள் இருக்கின்றனவா என்றும் சந்திப்பின் போது கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

சிறிதரன், தமிழரசு கட்சியின் முன்னான் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் ஆகியோர், தங்களுடைய நாட்டு உளவுத்துறையுடன் தொடர்புகள் வைத்திருப்பது பற்றிய தகவல்களை தாங்கள் அறிந்திருப்பதாகவும் ஆனால் தங்களுடைய ஆட்களுடன் தொடர்பிலிருக்கும் போதே, பாக் உளவுத்துறையான ஜ.எஸ்.ஜ உடனும் தொடர்பிலிருப்பதற்கான சாத்தியங்கள் இருந்தால் அது பாரதூரமான அரசியல் விளைவுகளை ஏற்படுத்தலாம் என்றும் குறித்த அதிகாரிகள் சம்பந்தனை எசச்சரித்திருக்கின்றனர்.

தமிழ் மக்களுக்கான ஒரு அரசியல் தீர்வை பெற வேண்டுமென்று சம்பந்தன் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற சந்தர்ப்பத்தில் இப்படியான விவகாரங்கள் வெளிவருவதும், அது தொடர்பில் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களே தேவையற்ற வகையில் உளவுத்துறைகளை தொடர்புபடுத்தி செய்திகளை வெளியிடுவதும் நல்லதல்ல என்றும் அந்த அதிகாரிகள் சம்பந்தனுக்கு ஆலோசனை வழங்கிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சிறிதரனை கட்டுப்படுத்துமாறும் இல்லாவிட்டால், இது தொடர்பில் தாம் கடும் நடவடிக்கைகள் எடுக்க நேரிடும் என்றும் அந்த அதிகாரிகள் சம்பந்தனுக்கு தெளிவுபடுத்தியிருக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு கருணாநிதி வாழ்த்து!!
Next post ஐதேகவின் 69வது ஆண்டுவிழா இன்று!!