துப்பாக்கியால் சுட்டு ஒருவர் கொலை!!

Read Time:1 Minute, 19 Second

1492219352GUNசெல்லகதிர்காமம், மருவங்குவ பிரதேசத்தில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு 10.30 மணியளவில் குறித்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செல்ல கதிர்காமத்தில் வசிக்கக் கூடிய 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த மேலும் ஒருவர் கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேக நபர்கள் தொடர்பில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இறுதிப் பயணம் சென்ற தாயும் பிள்ளையும்!!
Next post கஷ்டப் பிரதேசங்களில் சுகாதார சேவையைப் பலப்படுத்த வேண்டும்!!