ஈராக்-2 அமெரிக்க வீரர்கள் கொடூர கொலை
ஈராக்-2 அமெரிக்க வீரர்கள் கொடூர கொலை பெண்ணை கற்பழித்து கொன்றதற்கு பழிக்குப் பழி கொடூரமாக கொலை செய்யப்பட்ட 2 அமெரிக்க வீரர்களின் உடல்களை காட்டும் வீடியோ படத்தை அல் கொய்தா அமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் ஈராக் தீவிரவாத அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அல்கொய்தா அமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் ஈராக் தீவிரவாத அமைப்பான ¬ஜாஹிதீன் ஷýரா கவுன்சில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த அமைப்பின் இணைய தளத்தில் இப்படம் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்க ராணுவ உடை அணிந்த இரு உடல்கள் அதில் காணப்படுகின்றன. சமீபத்தில் அமெரிக்க ராணுவ வீரர்களால் கற்பழித்துக் கொடூரமாக கொல்லப்பட்ட ஈராக் பெண்ணுக்கு இந்த இரு வீரர்களின் மரணத்தை அர்ப்பணிப்பதாக அப்படத்துடன் செய்தி இடம் பெற்றுள்ளது.
இதில் ஒரு வீரரின் உடல் முற்றிலும் சிதைக்கப்பட்டுளளது. இருவரும் மிகக் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பதாக தெரிகிறது. இருவரது உடலிலும் பல பகுதிகளில் சதைகளையே காண முடியவில்லை. அந்த அளவுக்கு வெறித்தனமாக அவர்களை தீவிரவாதிகள் சிதைத்துள்ளனர். உடல்களை துப்பாக்கிக் குண்டுகளால் சல்லடை போல தீவிரவாதிகள் துளைத்து எடுத்துள்ளனர்.
வீடியோ படத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்த இருவரும் அமெரிக்க வீரர்கள். யூசுபியா என்ற இடத்திலிருந்து இவர்களை கடத்தினோம். இவர்கள் இடம் பெற்றுள்ள அமெரிக்கப் படைப் பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்களால் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்ட எங்களது சகோதரிக்கு இவர்களின் மரணத்தை சமர்ப்பிக்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
வீடியோ படத்தின் காட்சிகள் தொடங்குவதற்கு முன்பு ஓசாமா பின்லேடனின் பேச்சும் இடம்பெற்றுள்ளது. சமீபத்தில் கொல்லப்பட்ட அபு ¬சப் அல் சர்காவியின் குரலும் பின்னணியில் வருகிறது. இந்தக் கொலைகள் குறித்து அமெரிக்க தரப்பில் இதுவரை எந்த கருத்தும் வெளியிடப்படவில்லை.
கொல்லப்பட்டதாக கூறப்படும் கிறிஸ்டியன் மென்சாச்சா, தாமஸ் டக்கர் ஆகிய இரு அமெரிக்க வீரர்களும் இடம் பெற்றிருந்த படைப் பிரிவைச் சேர்ந்த 5 அமெரிக்க வீரர்கள், ஈராக்கைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரைக் கற்பழித்துக் கொன்றது மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 3 பேரை கொலை செய்ததாக கடந்த மார்ச் மாதம் குற்றம் சாட்டப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...