கூட்டமைப்புக்குள் பாக்கிஸ்தானிய உளவுத்துறையான ஜ.எஸ்.ஜ: ஸ்ரீதரன் எம்.பி.யின் பின்னணி அறிந்து இரா.சம்பந்தன் அதிர்ச்சி..!! (உண்மை சம்பவங்களின் தொகுப்பு)!!

Read Time:9 Minute, 7 Second

timthumb (1)கூட்டமைப்புக்குள் பாக்கிஸ்தானிய உளவுத்துறையான ஜ.எஸ்.ஜ: ஸ்ரீதரன் எம்.பி.யின் பின்னணி அறிந்து இரா.சம்பந்தன் அதிர்ச்சி..!! (உண்மை சம்பவங்களின் தொகுப்பு)

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து இலங்கையில் தங்களுடைய நலன்கள் பாதிக்கப்படுவதாக கருதும் பாகிஸ்தானிய வெளியக உளவுத்துறையான ஜ.எஸ்.ஜ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஊடுருவுவதில் வெற்றி பெற்றிருக்கிறது.

நீண்டகாலமாக தமிழ் அரசியல் கட்சிகளுக்குள் தங்களுக்கான முகவர்களை உருவாக்குவதில் வெற்றிபெற முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த ஜ.எஸ்.ஜ,, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மூலம் தங்கள் இலக்கில் வெற்றி பெற்றிருக்கிறது.

இரு தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சியிலுள்ள உல்லாச விடுதியொன்றில் வைத்து, சிறிரதனுக்கும் ஜ.எஸ்.ஜயிற்கான இலங்கை அதிகாரி ஒருவருக்கும் இடையில் இரகசிய சந்தித்திப்பொன்று இடம்பெற்றிருக்கிறது. இந்தச் செய்தியறிந்து, கூட்டமைப்பின் தலைமைப்பீடம் அதிர்ச்சியடைந்திருக்கிறது.

சிறிதரன் பகிரங்கமாகவே தன்னை ஒரு விடுதலைப் புலி ஆதரவாளனாகவும், விடுதலைப் புலிகளிகளின் தலைவர் பிரபாகரனே, தன்னுடைய தலைவரென்றும் கூறிவரும் ஒருவர். 2009இல் யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் அரசியல் தலைவர்கள் விடுதலைப் புலிகள் தொடர்பில் பேசவே அஞ்சிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், சிறிதரனால் மட்டும் எப்படி இப்படியெல்லாம் பேச முடிகிறது?

பிரபாகரனின் படத்தை வைத்திருந்தவர்களைக் கூட, கோத்தபாயவின் புலனாய்வுப் பிரிவு விட்டு வைத்திருக்கவில்லை. இப்படியொரு சூழலில் சிறிதரனால் மட்டும் எவ்வாறு, இப்படி பகிரங்கமாக பிரபாகரனை ஆதரித்து பேச முடிகிறது? இப்படி கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனே பலரிடமும் விசாரிக்குமளவிற்கு, சிறிதரன் ஒரு மர்மமான நாடாளுமன்ற உறுப்பினராக திகழ்ந்தார். சாதாரண மக்களோ சிறிதரனை ஒரு துணிச்சலான ஆளாக பார்த்தனர்.

ஆனால் அந்த மர்மத்திற்கும், துணிச்சலுக்கும் பின்னால் இருப்பது ஆசியாவில் அனைத்து நாடுகளிலும் தன்னுடைய முகவர்களை பரப்பியிருக்கும் மிகவும் ஆபத்தான பாகிஸ்தானிய உளவுத்துறை என்பது இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இந்தியாவின் செல்வாக்கிற்கு உட்பட்டவர் என்பதை துல்லியமாக கணித்திருந்த ஜ.எஸ்.ஜ, கூட்டமைப்பிற்குள் தங்களின் விசுவாசி ஒருவரை வளர்க்க விரும்பியது. இதற்காக மிகவும் பொருத்தமான நபராக நீண்டகாலம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாடசாலை அதிபராக இருந்தவரும், பிரபாகரனது நம்பிக்கைக்குரிய இராணு தளபதிகளில் ஒருவரான தீபனின் சகோதரியை திருமணம் செய்தவருமான சிறிதரன் தான் தங்களுக்கு ஏற்ற ஆள் என்பதை ஜ.எஸ்.ஜ இனம் கண்டதைத் தொடர்ந்து சிறிதரனுக்கு வலைவீசியது.

ஜ.எஸ்.ஜ சிறிதரன் பற்றிய தகவல்களை திரட்டிக் கொண்டிருந்த வேளையில் தான் ஜ.எஸ்.ஜ இற்கு கூட்டமைப்பிற்குள் இருந்த ஒரேயொரு தொடர்பாளரான (நேரடியாக அல்ல) வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் தொடர்பை இந்தியா கண்டு பிடித்திருந்தது. இது தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர், இந்திய தூதரகத்திற்கு அழைத்து அறிவுறுத்தப்பட்டதை தொடர்ந்து, அந்த தொடர்பும் துண்டிக்கப்பட்டது.

இந்த அனுபவத்தையும் கருத்தில் கொண்ட ஜ.எஸ்.ஜ,, கட்சியின் தலைமைக்கு அடங்காத அதே வேளை, எதிர்காலத்தில் தமிழரசு கட்சியின் தலைவராக வரவேண்டும் என்பதில் ஆசையுள்ள ஒருவரை தங்களின் முகவராக மாற்றுவது தான் சரியானதென முடிவுசெய்தது. இந்த அடிப்படையில் சிறிதரனை கொழும்பில் வைத்து பல தடவைகள் பாகிஸ்தானிய தூதரகத்துடன் தொடர்புடைய முஸ்லிம் வர்த்தகர்கள் மூலமாக சந்தித்து, தங்களின் முகவராக மாற்றும் வேலைகளில் ஈடுபட்டது.

ஒரு சில சந்திப்புக்களிலேயே சிறிதரனின் பலவீனங்களை துல்லியமாக மதிப்பிட்ட ஜ.எஸ்.ஜ, சிறிதரனை தங்களின் நிரந்தர முகவராக்கிக் கொண்டது. ஜ.எஸ்.ஜ வழங்கிய அறிவுரைகளுக்கு அமையவே சிறிதரன் தன்னை விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளராக காண்பித்து வந்தார். இவ்வாறு சிறிதரன் பேசுகின்ற போது இலங்கை பாதுகாப்பு தரப்பினால் வரப் போகும் அச்சுறுத்தல்களை தாங்கள் பார்த்துக் கொள்வதாக ஜ.எஸ்.ஜ வாக்குறுதியளித்தது. அந்த வாக்குறுதியை அவர்கள் காப்பாற்றினர். இது சிறிதரனுக்கு மேலும் உற்சாகமளித்தது.

ஜ.எஸ்.ஜயின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே சிறிதரன், இலங்கை நாடாளுமன்றத்தில் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தினார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது சிறிதரன் பணத்தை வாரி இறைத்திருக்கின்றார். சிறிதரனால் எப்படி இந்தளவு பணத்தை செலவழிக்க முடிகின்றது என்று கூட்டமைப்பின் தலைவர்களே ஆச்சரியப்பட்டிருக்கின்றனர். ஆனால் அதற்கான விடை பாக்கிஸ்தானிய உளவுத் துறை என்பது இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் சிறிதரனை வெல்ல வைப்பதற்காக ஜ.எஸ்.ஜ கோடிக்கணக்கில் வழங்கியிருக்கிறது. இன்று சிறிதரன் வடக்கு கிழக்கிலேயே அதிக விருப்பு வாக்குகளில் வெற்றி பெற்றிருக்கிறார். எதிர்காலத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக வர வேண்டுமாயின், சிறிதரன் தன்னுடைய மக்கள் செல்வாக்கை காண்பிக்க வேண்டும். இந்த ஆலோசiனையும் பாக். உளவுத்துறையே வழங்கியிருந்தது.

இலங்கையின் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் பின்னர் இலங்கையில் பாகிஸ்தானிய உளவுத்துறையான ஜ.எஸ்.ஜ மற்றும் சீன உளவுத்துறையான எம்.எஸ்.எஸ் ஆகியன இலங்கையிலுள்ள சிறிய அரசியல் கட்சிகளுக்குள் ஊடுருவுவதில் அதிக ஆர்வம் காட்டி வருவதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்திருக்கும் நிலையில் தான் ஜ.எஸ்.ஜ கூட்டமைப்பைக்குள் ஊடுருவியிருப்பது அம்பலமாகியிருக்கிறது.

ஆட்சி மாற்றத்தின் போது, சிறிய அரசியல் கட்சிகளின் பங்கு பிரதானமாக இருந்ததே, மேற்படி இரு உளவுத்துறைகளும் சிறிய, முக்கியமாக தமிழ் அரசியல் கட்சிகளை இலக்கு வைத்து செயற்பட்டு வருகின்றன என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

தகவல்
ந.சந்திரபாலன் -வவுனியா

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போதுமான தூக்கமின்மை தடிமன் தொற்றை அதிகரிக்கும்..!!!
Next post 20வது திருத்த சட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள ஆதரவு கோருகின்றார் ஜனாதிபதி!!