பயங்கரவாதம் உலக நாடுகளின் பொதுவான அச்சுறுத்தல்!!

Read Time:1 Minute, 48 Second

2028121828Hameed Karsai5 வது தடவையாக இலங்கை இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு மாநாடு இன்று இரண்டாவது நாளாக கொழும்பு கலதாரி ஹோட்டலில் இடம்பெறுகின்றது.

“உலக சவால்களுக்கு முன் தேசிய பாதுகாப்பு” என்ற தொனிப்பொருளில் இந்தக் கருத்தரங்கு இடம்பெறும் அதேவேளை விஷேட பிரதிநிதியாக ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஹமீட் கர்ஸாய் கலந்து கொண்டுள்ளார்.

விஷேட பிரதிநிதியாக வருகை தந்துள்ள ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஹமீட் கர்ஸாய் நேற்றையதினம் இங்கு உரையாற்றி இருந்தார்.

பயங்கரவாதம் உலக நாடுகளின் பொதுவான அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்று ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் இலங்கை முற்றாக மாற்றமடைந்துள்ளதுடன் அமைதியான நாடாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஏனைய நாடுகளுக்கு இலங்கை எடுத்துக்காட்டாக விளங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பீ.எம்.யூ.டி. பஸ்நாயக்க மற்றும் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கிறிஷாந்த டி சில்வா ஆகியோரும் இந்நிகழ்வில் உரையாற்றியிருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 20வது திருத்த சட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள ஆதரவு கோருகின்றார் ஜனாதிபதி!!
Next post சுற்றுலா சென்ற பௌத்த பீட பிக்கு மாணவன் நீரில் மூழ்கி பலி!!