ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பூரண புனரமைப்புக்கு உட்படுத்தப்படும்!!

Read Time:1 Minute, 39 Second

2146760539maithiryஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பூரண புனரமைப்புக்கு உட்படுத்த உள்ளதாக அதன் தலைவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொலன்னறுவையில் இன்று (02) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுரந்திர கட்சியின் 64வது மாநாட்டில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பூரண மீள்புனரமைப்புக்கு உட்படுத்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றக்கூடிய சக்தியாக முன்னேற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.

நாட்டுக்காக அனைவரையும் ஒன்றிணைத்துக் கொண்டு பயணிக்கவுள்ளதாகவும் ஆனால் தனது பயணம் வேகமான பயணம் இல்லை என்றும் மெதுவான பயணம் என்பதால் மீள்திருப்பம் இல்லை என்றும் ஜனாதிபதி கூறினார்.

நடந்து முடிந்த தேர்தலில் பெற்ற தோல்விக்கான காரணத்தை கண்டறிந்து கட்சியை வெற்றிக்கான புதிய பாதையில் கொண்டுசெல்ல வேண்டும் என அவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 64வது மாநாட்டில் முன்னாள் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாட்டில் பௌத்த மதத்தை சீரழித்தது ஜாதிக ஹெல உறுமயவே!
Next post வட மாகாண சபை பிரேரணை ஐ.நா அலுவலகத்தில் கையளிப்பு!!