நல்லாட்சியை விரும்பும் புதிய சபாநாயகருக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி வாழ்த்து!!

Read Time:2 Minute, 29 Second

647357142tmkபல காலங்களாக நல்லாட்சியை விரும்பும் ஒருவர் புதிய பாராளுமன்றில் சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை மகிழ்ச்சி அளிப்பதாகவும் இந்த பாராளுமன்றில் மக்களில் ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க முடிவும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இன்று பாராளுமன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார்.

புதிய சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட கரு ஜயசூரியவிற்கு தமிழ்த் முற்போக்கு கூட்டணியின் தலைவர் என்ற வகையிலும் அதன் பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம், வேலுசாமி ராதாகிருஸ்ணன் உள்ளிட்ட 7 பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக மனோ கணேசன் கூறினார்.

நல்லாட்சி என்பது இலகுவாக பெற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று அல்ல என்றும் பாராளுமன்றுக்கு வெளியில் இருந்து பல அமைப்புக்கள், இயக்கங்கள் உருவாக்கி மேற்கொண்ட போராட்டங்களின் பயனாக புதிய பாராளுமன்றம் ஒன்றை ஏற்படுத்த முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரிவுபடாத இலங்கைக்குள் மக்கள் சமத்துவத்துடன் சம உரிமையுடன் ஐக்கியத்துடன் வாழ உரிமை வழங்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

மக்களின் மகிழ்ச்சி, இன்பத்தை பாராளுமன்றில் கூறும் அதேவேளை, மக்களின் துன்பங்கள், கஸ்டங்கள், கண்ணீர், துயரங்களையும் எடுத்துக் கூற வாய்ப்பு கிட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

புதிய பாராளுமன்றில் பல்லினத்தன்மை காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கை புதிய சபாநாயகர் நியமனத்தின் மூலம் ஏற்பட்டுள்ளதாக மனோ கணேசன் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாதுகாப்பு கருத்தரங்கு இன்று ஆரம்பம்!!
Next post எதிர்க்கட்சிக்குள் ஒரு எதிர்க்கட்சி!!