வௌிநாட்டு நாணயத்தாள்களை கடத்த முற்பட்ட இருவர் கைது!!

Read Time:1 Minute, 15 Second

6556106591829546196katunayaka2சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை வௌிநாட்டுப் பணத்தை கடத்திச் செல்ல முயற்சித்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூர் நோக்கி புறப்படுவதற்கு வந்த இருவர் இன்று அதிகாலை இவ்வாறு கைது செய்யப்பட்டதாக சுங்கப் பிரிவின் ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.

இதன்போது அவர்களிடம் இருந்த அமெரிக்க டொலர்கள், யூரோ மற்றும் சுவிஸ்பிரேங் ஆகிய நாணயத்தாள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அவற்றின் பெறுமதி 71 இலட்சத்து 85,000 ரூபா என்று சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வத்தளை மற்றும் ராகலை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்கப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓமந்தை சோதனைச் சாவடி நிரந்தரமாக நீக்கப்பட வேண்டும்!!
Next post புதிய பாராளுமன்றம் எப்படி கூடுகின்றது தெரியுமா?