இலங்கைக்கு வழங்கிய போர்கப்பலை மீளப் பெறுமாறு கோரிக்கை!!

Read Time:2 Minute, 6 Second

469930887kkஇலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட போர்க் கப்பலை திரும்பப் பெற வேண்டும் என இந்திய அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“இலங்கை அரசுக்கு போர் கப்பல் ஒன்றை இலவசமாக இந்திய அரசு அளித்திருப்பதற்கு தி.மு.க. சார்பில் எதிர்ப்பினைத் தெரிவிப்பதோடு, அந்தப் போர்க் கப்பலைத் திரும்பப் பெற வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன்.

இலங்கை அரசு அங்கே வாழும் தமிழர்களுக்கும், மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்களுக்கும் தொடர்ந்து பல்வேறு இன்னல்களை விளைவித்த போதிலும், இந்திய அரசு, இலங்கை அரசுக்கு உதவி செய்வதை நிறுத்தாமல் செய்து கொண்டே வருகிறது. அந்த வரிசையில் இந்தியக் கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான வராஹா என்ற போர்க் கப்பலை இலங்கை கடற்படைக்கு இந்தியா இலவசமாக தற்போது வழங்கியுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த ராணுவத்தினருக்கு கடந்த காலத்தில் இந்திய அரசு இது போல் தான் பயிற்சி கொடுத்தது. அந்த வரிசையில் தற்போது போர் கப்பல் ஒன்றை இலவசமாக இந்திய அரசு இலங்கைக்கு அளித்திருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எதிர்ப்பினைத் தெரிவிப்பதோடு, அந்தப் போர்க் கப்பலைத் திரும்பப் பெற வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன்.”

இவ்வாறு கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எதிர்கட்சிகளின் விருப்பத்திற்கு ஏற்ப எதிர்கட்சித் தலைவரை நியமிக்க ஜனாதிபதி இணக்கம்!!
Next post ஆப்கான் முன்னாள் ஜனாதிபதி இலங்கை வருகை!!